Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

BiggBoss 6 Tamil கவர்ச்சிக்கு பஞ்சமில்லை...! தரமான ஆளுங்கள இறக்கும் விஜய் டிவி...!

UDHAYAKUMAR August 24, 2022 & 17:00 [IST]
BiggBoss 6 Tamil கவர்ச்சிக்கு பஞ்சமில்லை...! தரமான ஆளுங்கள இறக்கும் விஜய் டிவி...!Representative Image.

தர்ஷா குப்தா, ஷில்பா மஞ்சுநாத் என இரண்டு கவர்ச்சி கடல்களை பிக்பாஸ் வீட்டுக்குள் இறக்கிவிட முடிவு செய்துள்ளது விஜய் டிவி. பிக்பாஸ் தமிழ் சீசன் 6 வேற லெவலுக்கு இருக்கப்போகிறது என ரசிகர்கள் குதூகலமாகியிருக்கிறார்கள். 

விஜய் டிவியில் வருடா வருடம் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 5 சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த ஆண்டு இதன் 6வது சீசன் துவங்கவுள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பில் செப்டம்பரில் கலந்து கொள்ளவிருப்பதால், இந்த முறை பிக்பாஸுக்கு கமல்ஹாசன் வருவாரா என்பது தெரியவில்லை. இருந்தாலும், கடந்த ஓடிடி பிக்பாஸ் போல சிம்புவோ, கமல்ஹாசன் ஓய்வில் இருந்தபோது தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணனோ தொகுத்து வழங்கலாம் என நம்பப்படுகிறது. 

இம்முறை சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களாக தொகுப்பாளர் ரக்சன்,  சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக்,  இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி, டிடி, ரஞ்சித், ஸ்ரீநிதி ஆகியோர் கலந்து கொள்வார்கள் என பலரும் கூறி வருகின்றனர். இதில் குறைந்தபட்சம் இருவர் நிச்சயம் கலந்துகொள்வார்கள் என நம்பலாம். அதேநேரம் விஜய் டிவி நடிகர் நடிகைகள் 2 பேராவது நிச்சயம் நிகழ்ச்சியில் இருப்பார்கள். 

இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வழங்கும் தர்ஷா குப்தா, மற்றும் காளி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களில் நடித்த நடிகை ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என பேசி வருகின்றனர் ரசிகர்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்