Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிக்பாஸ் சீசன் 6: நரகமா..? சொர்க்கமா..? டாஸ்க்கில் அனல் பறக்கும் அசீம், அமுதவாணன் சண்டை..!

Editorial Desk Updated:
பிக்பாஸ் சீசன் 6: நரகமா..? சொர்க்கமா..? டாஸ்க்கில் அனல் பறக்கும் அசீம், அமுதவாணன் சண்டை..! Representative Image.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின்  இன்றைய ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான புதிய டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் வழக்கம் போல் இரு அணிகளாகப் பிரிந்து விளையாட ஆரம்பித்துவிட்டார்கள்.   

இந்த வாரத்திற்கான டாஸ்க்காக பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கதைக்களம் "சொர்கத்து வாசிகள் மற்றும் நரகத்து வாசிகள்", அதாவது வீட்டில் உள்ள அனைவரும் இரண்டு குழுக்களாகப் பிரிந்து ஒரு சிலர் சொர்க்கத்தில் வாழ்பவர்களாகவும் மற்றும் சிலர் நரகத்தில் வாழ்பவர்களாகவும் போட்டியை விளையாடத் தொடங்க வேண்டும்.

இந்த டாஸ்கின் படி நரகவாசிகளாக உள்ள போட்டியாளர்கள் சொர்க்கத்தில் வாழும் தேவதைகளான போட்டியாளர்கள் கொடுக்கும் டாஸ்க்களை செய்து வெற்றி பெற்று சொர்க்கத்தில் வாழும் வாய்ப்பை பெறலாம். அடுத்தாக நரகத்து வாசிகள் தாமாகவே முயன்று தங்களை அடைத்து வைத்திருக்கும் சிறையிலிருந்து வெளியேறி சொர்க்கத்துக்குள் நுழைந்தால் சொர்க்கத்தில் வாழும் வாய்ப்பை அடையலாம்.

இப்படி நரகத்தில் வாழும் போட்டியாளர்கள் சொர்க்கத்தில் வாழும் வாய்ப்பை பெற்றால், சொர்க்கத்தில் வாழும் போட்டியாளர்கள் ஒன்றாக இணைந்து தங்களில் ஒருவரை நரகத்திற்கு அனுப்ப வேண்டும். மேலும் சொர்கத்து வாசிகளாக மணிகண்டா, அமுதவாணன், ரச்சித்தா மற்றும் கதிரவன் ஆகியோர் உள்ளனர். இதில் முக்கிய போட்டியாளர்களாகக் கருதப்படும் அசீம், தனலட்சுமி, ஷிவின், ஏ.டி.கே மற்றும் சிலர் நரகத்து வாசிகளாக உள்ளனர்.

அடுத்தாக வெளியான இரண்டாவது ப்ரோமோவில் வழக்கம்போல் நம் சண்டை மன்னன் அசீம் தனது ஆட்டத்தைத் தொடங்கிவிட்டார். இதில் அசீம் அமுதவாணனிடம் நீங்கள் உங்கள் குரூப்பில் உள்ள ஜனனி மற்றும் தனலட்சுமி தான் தேவதைகளாக மாற பல வாய்ப்புகளைத் தருகிறீர்கள். மற்றவர்களுக்கு வாய்ப்பை வழங்கவில்லை என்று சண்டையை ஆரம்பிக்கிறார். இது அமுதவாணன், அசீம் மற்றும் தனலட்சுமிக்கு இடையில்  பெரிய வாக்குவாதமாக மாறுவது தெளிவாகத் தெரிகிறது.

பிக்பாஸ் ஒவ்வொரு வாரமும் என்ன புதிய டாஸ்க்களை கொடுத்தாலும், நாங்கள் சண்டைக்குத் தான் முன்னுரிமை கொடுப்போம் என்பதைப் போலத் தான் இந்த சீசன் முழுவதும் பிக்பாஸ் நடக்கிறது. இந்த வாரத்தின் டாஸ்கின் முதல் நாளிலேயே சண்டையைத் தொடங்கிய போட்டியாளர்கள் எப்படி இந்த டாஸ்க்கை கையாளப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து காண்போம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்