Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிக்பாஸ் சீசன் 6: கலவரமாகும் போட்டிக்களம்.. நாமினேஷனில் முக்கிய போட்டியாளர்கள்..! தொடரும் அசீம், ஏ.டி.கே பிரச்சனை..!

Editorial Desk Updated:
பிக்பாஸ் சீசன் 6: கலவரமாகும் போட்டிக்களம்.. நாமினேஷனில் முக்கிய போட்டியாளர்கள்..! தொடரும் அசீம், ஏ.டி.கே பிரச்சனை..! Representative Image.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த "டபுள் எலிமினேஷன்" மூலம் ராம் மற்றும் ஆயிஷா இருவரும் போட்டியிலிருந்து தனித்தனியாக வெளியேற்றபட்டனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளர்கள் உள்ள நிலையில் போட்டி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

இன்று வெளியான  பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வாரத்தின் முதல் ப்ரோமோவில் நாமினேஷன் வழக்கம் போல் நடந்தது. இப்பொழுது பிக்பாஸ் வீட்டில் மொத்தமாக 11-போட்டியாளர்களே மீதம் இருக்கும் நிலையில் இந்த வார நாமினேஷன் மிகவும் முக்கியமான ஒன்றாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ப்ரோமோவில் பார்த்த வரை முக்கிய போட்டியாளர்களாகக் கருதப்படும் மணிகண்டா, விக்ரமன், அசீம், ஏ.டி. கே, ரச்சித்தா ஆகியோர் இடம்பெற்றுள்ளது தெரியவருகிறது.

இந்த பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பித்து 70-நாட்களை நெருங்கும் நிலையில் உள்ளது. அதனால் இனி போட்டிக்களம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதற்கு இந்த நாமினேஷன் லிஸ்ட் ஒரு எடுத்துக்காட்டாகத் தெரிகிறது. முக்கியமாகப் போட்டியாளர் மணிகண்டாவை, அதிக போட்டியாளர்கள் நாமினேட் செய்துள்ளனர். மேலும் விக்ரமனை சின்ன சின்ன விஷயங்களுக்கு அதிகமாகக் கோபப்படுகிறார் என்ற புதிய காரணத்தைக் கூறி நாமினேட் செய்துள்ளனர். வழக்கம் போல் அசீமை இந்த பிக்பாஸ் போட்டியின் தரத்தைக் குறைக்கின்றார், தகாத வார்த்தைகளைப் பேசுகிறார் என்று பல காரணங்களைக் கூறி நாமினேட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக வெளியாகிய ப்ரோமோவில் அசீம் பற்றி  ஏ.டி.கே வழக்கம்போல் விக்ரமனிடம் குறைகூறி வருகிறார். அதில் அசீம் ஒவ்வொரு முறையும் பல சண்டைகளை வேணும் என்றே போடுகிறார், பிறகு உடனே தன்னை மன்னிக்கும் படி  கூறிவிடுகிறார். நாம் அனைவரும் அதைப் பார்த்து நம்பி ஏமாறி விடுகிறோம். இதனைத் தான் தனது விளையாட்டு யுக்தியாக அசீம் பயன்படுத்தி வருகிறார் என்று கூறுகிறார்.

இந்த விஷயம் மூலம் ஏ.டி.கே மற்றும் அசீம் இருவருக்கும் இடையில் சண்டை அல்லது வாக்குவாதம் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சிலதினங்கள் தான் உள்ள நிலையில் இந்த வார நாமினேஷன் மூலம் போட்டி அடுத்தகட்டத்துக்கு நகர்ந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்