Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிக்பாஸ் சீசன் 6 : போட்டியாளர்கள் இடையே தொடரும் சண்டைகள்..! பிக்பாஸ் கொடுத்த புதிய டாஸ்க்..!

Editorial Desk Updated:
பிக்பாஸ் சீசன் 6 : போட்டியாளர்கள் இடையே தொடரும் சண்டைகள்..! பிக்பாஸ் கொடுத்த புதிய டாஸ்க்..!Representative Image.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய ப்ரோமோக்கள் வெளியானது. வழக்கம்போல் விவாதத்துடன் ஆரம்பிக்கும் முதல் ப்ரோமோ. அடுத்தாக வந்த இரண்டாவது ப்ரோமோவில் புதிய டாஸ்க்கில் பங்கேற்கும் போட்டியாளர்கள். மேலும் கடைசியாக வந்த மூன்றாவது ப்ரோமோவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை பயணித்து ஜெயிக்கும் வாய்ப்புள்ள போட்டியாளர்களை வீட்டில் உள்ள அனைவரும் தேர்ந்தெடுத்து சொல்லவேண்டும் என்பதைப் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

பிக்பாஸ்  வீட்டில் இந்த வாரத்திற்கான டாஸ்கில்  நரகத்தில் வாழ்பவர்கள் மற்றும் சொர்க்கத்தில் வாழ்பவர்கள் என்ற இரு அணிகளாகப் பிரிந்து வீட்டில் உள்ள போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள். இந்நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் புதிதாக அமுதவாணன் மற்றும் மைனாவிற்கு இடையில் காரசாரமான வாக்குவாதம் நடந்து அது சண்டையாக மாறுவதாகத் தெரிய வருகிறது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தங்கள் உண்மை முகங்களைக் காட்டுவதாகத் தெரிகிறது.

அதன் பிறகு வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பிக்பாஸ் புதிய டாஸ்க் ஒன்றை வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு வழங்கி உள்ளார். அதில் வீட்டில் உள்ள அனைவரும் 10 வயது குழந்தைகள் படிக்கும் பாடத்திலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். இதற்கு வீட்டில் உள்ள போட்டியாளர்களின் பதில்கள் நமக்கு நகைப்பைத் தான் தருகிறது. மேலும் போட்டியில் சில நாட்களாக பெரியதாகச் சுவாரசியம் இல்லாமல் செல்வதால் அதனை மாற்றும் விதமாக இதைப் போல் புதிய முயற்சிகளை பிக்பாஸ் குழுவினர் செய்வதாகத் தெரியவருகிறது.

பின்பு கடைசியாக வெளியான இன்றைய ப்ரோமோவில் பிக்பாஸ் ரசிகர்களுக்கு நிகழ்ச்சியைப் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதமாகக் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதில் வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து பிக்பாஸ் சீசன் 6-ல் டாப் -3 இடங்களைப் பிடிக்க வாய்ப்புள்ள போட்டியாளர்கள் முடிவு செய்து சொல்ல வேண்டும் என்பது தான். இந்நிலையில்  வீட்டில் உள்ள சில போட்டியாளர்கள் அசீம் மற்றும் விக்ரமன் பெயர்களைக் கூறுகிறார்கள். மேலும் இதுவரை அமைதியாகச் சென்ற வாரம் தலைகீழாக மாற இந்த ஒரு டாஸ்க் போதும் என்பது தெளிவாகத் தெரிகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்