Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தள்ளிப்போகும் பிக்பாஸ்.. எப்ப துவங்குது தெரியுமா?

UDHAYA KUMAR September 19, 2022 & 13:00 [IST]
தள்ளிப்போகும் பிக்பாஸ்.. எப்ப துவங்குது தெரியுமா? Representative Image.

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் துவங்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் நாளில் மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழில் மிகவும் புகழ்பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் விரைவில் துவங்கவுள்ளது.  இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார். இந்த சீசன் படப்பிடிப்புக்காக மொத்தம் 15 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் கமல்ஹாசன். கூடுதலாக தேவைப்பட்டால் 2 நாட்கள் ரிசர்வ் செய்து வைத்துள்ளனர். காரணம் இந்தியன் 2, அரசியல் பயணம் என அடுத்தடுத்து மிக நெருக்கமான கால்ஷீட் பிரச்னை இருக்கிறது என்பதுதான். 

கமல்ஹாசனுக்கு இந்த சீசனில் 100 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அடுத்தடுத்த கமல்ஹாசன் படங்கள் குறித்த அப்டேட்களுக்காகவும் டிஆர்பி எகிறும், அதுமட்டுமின்றி சில எக்ஸ்குளுசிவ் கண்டென்ட்கள் ஹாட்ஸ்டாரிலும் ஒளிபரப்பாகவுள்ளது என்பதால் 120 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

மொத்த போட்டியாளர்களில் ஒருவர் பொதுமக்களிலிருந்து நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறாராம். இதற்கான நேர்காணலும் நடைபெற்று வருவதாக தகவல். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.  அக்டோபர் 2 முதல் ஒளிபரப்பாகும் என கூறப்பட்ட நிகழ்ச்சி வரும் அக்டோபர் 9 முதல் ஒரு வாரம் தாமதமாக துவங்கும் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்