Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

டைட்டில் வின்னருக்கு இத்தனை லட்சங்களா? வாயடைத்துப் போன ரசிகர்கள்..!

UDHAYA KUMAR Updated:
டைட்டில் வின்னருக்கு இத்தனை லட்சங்களா? வாயடைத்துப் போன ரசிகர்கள்..!Representative Image.

பிக்பாஸ் 6 தமிழ் நிகழ்ச்சியின் இறுதி போட்டி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.  மொத்தம் 3 இறுதிப் போட்டியாளர்களில் ஒருவர் தான் வெற்றியாளர் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் விக்ரமன், அசீம் மற்றும் ஷிவின் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களில் யார் வெல்லப்போகிறார்கள் என்கிற விவாதம் ஒரு புறம் இருக்க, இதில் வெற்றி பெறுபவர்களுக்கு எத்தனை லட்சங்கள் பரிசாக கிடைக்கும் என்பதே பலரின் பேச்சாக இருக்கிறது. 

21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6, ஒவ்வொரு வாரமும் பலர் நாமினேட் செய்யப்பட்டு ஒருவர் எலிமினேட் செய்யப்பட்டனர். முதலில் ஜி பி முத்து முதல் வாரமே தாமாகவே வெளியேறினார்.  அடுத்ததாக நடிகை சாந்தி, ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, தனலட்சுமி,  மணிகண்டன், ரச்சிதா, ஏடிகே ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர். இவர்களின் ஆட்டத்துக்கு ஏற்ப ரசிகர்கள் இவர்களை பல நாமினேசன்களிலிருந்து காப்பாற்றியும் இருக்கிறார்கள். 

கதிரவன் பணப்பெட்டி டாஸ்க்கில் 3 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார். பின்னர் மைனா நந்தினியும் வெளியேறினார்.  மீண்டும் பணப்பெட்டி டாஸ்க் 11,75,000 பணத்தை எடுத்துக் கொண்டு அமுதவாணன் வெளியேறினார்.  இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறும் நபருக்கு  50 லட்சம் ரூபாய் பரிசு தரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்