Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

10 years of Billa 2 டேவிட் பில்லா.. தன்னோட சாம்ராஜ்யத்த கட்டமைச்ச வரலாற்ற நமக்கு காட்டுன தினம் இன்று...! 10 வருடங்கள் கடந்து பில்லா 2 !

Udhaya Kumar July 13, 2022 & 11:03 [IST]
10 years of Billa 2 டேவிட் பில்லா.. தன்னோட சாம்ராஜ்யத்த கட்டமைச்ச வரலாற்ற நமக்கு காட்டுன தினம் இன்று...! 10 வருடங்கள் கடந்து பில்லா 2 !Representative Image.

தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு கதையை எடுத்து சக்ஸஸ் கொடுத்து அதன் முன்கதை எப்படி இருக்கும் என பாரபட்சம் பாராமல் 100 சதவிகிதம் அதற்காக மெனக்கெட்டு எடுத்த படம் பில்லா 2 மட்டும்தான். துளியளவும் சமரசம் செய்யாமல் ஒரு கேங்ஸ்டர் எப்படி இப்படி உருவாகிறான் என காட்டியுள்ள படம் பில்லா 2. நாயகன் அளவுக்கு இல்லாவிட்டாலும் அதனைப் பின்தொடர்ந்து நிற்கும் அளவுக்கு ஒரு கதை. தளபதி படம் அளவுக்கான அழுத்தத்தை முடிந்த வரையில் பதிவு செய்துள்ள இயக்குநர் சக்ரி டோலட்டி நிச்சயம் இதற்காக பாராட்டப்படவேண்டியவர். வழக்கம்போல இதுமாதிரியான கல்ட் கிளாசிக் படங்கள் என போற்றப்படுபவை தியேட்டர்களில் சரியாக ஓடியிருக்காது என்கிற வரலாறு இந்த படத்துக்கும் உண்டு. 

புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே சிவம், உத்தமவில்லன் என இத்தனை கதைகளையும் தோற்கடித்த மக்கள் பில்லா 2வையும் தோற்கடித்து தோற்றுப் போனார்கள். தமிழர்களின் ரசனை இவ்வளவு மட்டமாகிவிட்டதா எனும் அளவுக்கு சில மோசமான படங்களைக் கூட வெற்றிபெறச் செய்துள்ளனர். அதில் அஜித் படங்களும் நிறைய அடங்கும். 

மசாலாவாக இருந்தாலும் அரைக்கும் விதத்தில் அரைத்து கொடுத்தால் ருசிப்பவர்கள் இங்கு அதிகம். ஹரி, கே எஸ் ரவிக்குமார் மாதிரியான இயக்குநர்கள் இதுவரை செய்துவந்தது இவைதான். அவர்களின் படங்களை விட பில்லா 2 நல்ல படம் என்பது எனது கருத்து. 

அஜித்குமார், பார்வதி ஓமணக்குட்டன், வித்யூத் ஜாம்வால், புரூனா அப்துல்லா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் நிச்சயம்  அஜித் ரசிகர்களைத் தாண்டி மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கும் இஷ்டமான படமாக இருக்கும். 

10 வருடங்களைக் கடந்துவிட்ட பிறகும் இந்த படத்தில் வரும் வசனங்களை இன்றும் நினைவு கூர்ந்து அச்சுப்பிறழாமல் சொல்ல முடியும் அளவுக்கு அழுத்தமானது. அதில் முக்கியமானதாக நான் பார்ப்பது, என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிசமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா என அஜித்குமார் பேசும் வசனம் மிகவும் நெருக்கமானது. 

தீவிரவாதிக்கும் போராளிக்கும் இருக்குற வித்தியாசம் ஒன்னே ஒன்னுதான். வெற்றி. ஜெயிக்கிற வரைக்கும் தீவிரவாதி ஜெயிச்சிட்டா போராளி.

பிசினஸ்மேனா இருந்தாலும் சரி, கூலிக்காரனா இருந்தாலும் சரி, பிச்சக்காரனா இருந்தாலும் சரி. உழைக்கணும். பணம் ஈஸியா வந்துடாது சார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்