Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பக்கா மாஸ். ஜெயிலர் படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்!!

Sekar Updated:
பக்கா மாஸ். ஜெயிலர் படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்!!Representative Image.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டாக்டர், பீஸ்ட் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் நெல்சன் திலீப் குமார், அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்பத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கும் நிலையில், நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பும் படத்தில் இணைந்துள்ளார். தென்னிந்திய திரையுலகினர் மட்டுமல்லாது பாலிவுட் பிரபலங்களும் படத்தில் இணைவதால், படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இதற்கிடையே நெல்சனின் நெருங்கிய நண்பரும், சூப்பர் ஸ்டாரின் அதிதீவிர ரசிகருமான நடிகர் சிவகார்த்திகேயனும் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தாலும், அது தற்போதுவரை உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்