Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Cannes 2023 விழாவில் திரையிடப்படும் 4 இந்திய படங்கள்..! எந்தெந்த படங்கள் தெரியுமா..? | Cannes 2023 Film Festival Indian Movies

Gowthami Subramani Updated:
Cannes 2023 விழாவில் திரையிடப்படும் 4 இந்திய படங்கள்..! எந்தெந்த படங்கள் தெரியுமா..? | Cannes 2023 Film Festival Indian MoviesRepresentative Image.

இந்த 2023 ஆம் ஆண்டு, 76 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவானது மே மாதம் 16 ஆம் நாள் முதல் மே 27 ஆம் நாள் வரை நடைபெறுகிறது. இந்த விழாவில், ஸ்வீடிஸ் திரைப்படத் தயாரிப்பாளர் ஆன ரூபன் ஆஸ்ட்லண்ட் நடுவர் மன்றத் தலைவராக பணியாற்றுகிறார்.

சர்வதேச அளவில் நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் 4 இந்திய திரைப்படங்கள் பங்கேற்கின்றன. இந்நிகழ்ச்சியில் இந்திய திரைப்படங்களின் விவரங்களை இதில் காணலாம். இந்த திரைப்படங்களின் வரிசையில் அனுராக் காஷ்யப்பின் கென்னடி திரைப்படமும் அடங்கும்.

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2023

ஆண்டுதோறும், கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். அதன் படி, இந்த 2023 ஆம் ஆண்டும் 10 நாள்கள் அளவில் இந்த விழா நடைபெற உள்ளது. 10 நாள் திருவிழாவாக நடைபெறும் இந்த விழாவில் இந்திய படங்களின் பங்கேற்பு மிகவும் பெருமைக்குரியதாக அமைகிறது. இதில், பங்கேற்கும் இந்திய திரைப்படங்களின் பட்டியலைக் காணலாம். இவை அனைத்தும் வெவ்வேறு பிரிவுகளில் போட்டியிடுகின்றன.

ஆக்ரா: Director’s Fortnight பிரிவு

கானு பெஹலின் ஆக்ரா ஆனது 76 ஆவது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குனரின் Fortnight பிரிவில் அறிமுகமாகும். ஒரு குடும்பத்தில் உள்ள பாலியல் இயக்கவியலைப் பற்றி எடுத்துரைக்கும் திரைப்படமாக இந்தப் படம் உள்ளது. இந்தப் படத்தில் ஆஷிக் புகழான ராகுல் ராய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில் மற்ற நடிகர்களாக, பிரியங்கா போஸ், சோனல் ஜா, விபா சிப்பர், ருஹானி ஷர்மா, ஆஞ்சல் கோஸ்வாமி, மோஹித் அகர்வால் போன்றோர் அடங்குவர்.

இஷானோ: Classic பிரிவு

அரிபம் சியாம் ஷர்மாவின்  இஷானா திரைப்படமானது 1990 ஆம் ஆண்டு வந்த படம் ஆகும். இத்திரைப்படமானது கேன்ஸ் திரைப்பட விழாவில் கிளாசிக் பிரிவில் வழங்கப்படுகிறது. இத்திரைப்படம் முன்னரே 1991 ஆம் ஆண்டு Un Certain Regard என்ற பிரிவில் காட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த திரைப்படம் இரண்டாவது முறையாக கேன்ஸ் திரைப்பட விழாவில் 2023 ஆம் ஆண்டு தொகுத்து வழங்கும் என்று கூறப்படுகிறது.

கென்னடி: Midnight Screening’s பிரிவு

அனுராக் காஷ்யப்பின் கென்னடி திரைப்படத்தில் ராகுல் பட், சன்னி லியோன், அபிலாஷ் தப்லி போன்றோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் மிட்நைட் ஸ்கிரீனிங்ஸ் பிரிவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இறந்து விட்டதாக நம்பப்படும் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரியின் கதையே கென்னடி திரைப்படத்தின் கதையாகும். காஷ்யப் அவர்களின் கடைசி திரைப்படமான டோபராவில் பாவில் குலாட்டி, டாப்ஸி பண்ணு, ராகுல் பட் போன்றோர் நடித்தனர்.

நெஹெமிச்: Short Films பிரிவு

நெஹெமிச் என்ற குறும்படமானது, குறும்படம் பிரிவில் அறிமுகமாகிறது. FTII முன்னாள் மாணவர் யுதாஜித் பாசுவால் இப்படம் இயக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வரும் நாள்களில் விழாவில் திரையிடப்படும் எனவும் கூறினர். கொரோனா காலத்தின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நெஹெமிச், மாதவிடாய் சமயத்தில் பெண்கள் எவ்வாறு சமூகத்தால் தனிமைப்படுத்தப்படுகின்றனர் என்பதை ஆராய்கிறார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்