Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

டாம் குரூஸின் மிரள வைக்கும் ஆக்ஷன்...மிஷன் இம்பாசிபிள் 7 ட்ரைலர் ரிலீஸ் | Mission Impossible Dead Reckoning 1 Trailer

Priyanka Hochumin Updated:
டாம் குரூஸின் மிரள வைக்கும் ஆக்ஷன்...மிஷன் இம்பாசிபிள் 7 ட்ரைலர் ரிலீஸ் | Mission Impossible Dead Reckoning 1 TrailerRepresentative Image.

டாம் குரூஸ் நடிப்பில் உருவான மிஷன்: இம்பாசிபிள் — டெட் ரெக்கனிங் பாகம் ஒன்றின் ட்ரைலர் தற்போது வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது.

டாம் குரூஸ் அவர்கள் நடிப்பில் வரும் ஜூலை 12, 2023 அன்று உலகம் முழுவதும் மிஷன்: இம்பாசிபிள் — டெட் ரெக்கனிங் பாகம் ஒன்று வெளியாக உள்ளது. சுமார் 29 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்படத்தில் குரூஸுடன், விங் ரேம்ஸ், சைமன் பெக், ரெபேக்கா ஃபெர்குசன் மற்றும் வனேசா கிர்பி உள்ளிட்ட திறமையான நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். அதனால் ரசிகர்கள் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

Mission Impossible Dead Reckoning 1 Trailer:

ட்ரைலர் வீடியோ தொடங்கியதும், ஹன்ட் தனது மோட்டார் பைக்கில் வேகமாக சென்று ஒரு குன்றின் விளிம்பில் நிறுத்துவதைப் போல ஆரம்பிக்கிறது. ஏஜென்ட்டாக பணிபுரியும் ஹன்ட் மற்றும் அவரின் குழுவினர் மனிதகுலத்தை அழிக்கும் திறன் கொண்ட ஒரு ஆபத்தான ஆயுதத்தைக் கண்டுபிடிப்பதற்காக நேரத்தை எதிர்த்துப் போட்டியிடுகின்றனர். இது மிகவும் ஆபத்தான செயல் என்று ஏஜென்ட் யூஜின் கிட்ரிட்ஜ் ஹன்ட்டை எச்சரிக்கிறார். படத்தின் ட்ரைலர் கதை பற்றிய தகவலை அளிக்காமல், படம் முழுவதும் நடைபெறும் ஆக்ஷன் காட்சிகளை தெளிவாக காண்பித்துள்ளனர்.

ட்ரைலர் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் டாம் குரூஸை பாராட்டுகின்றனர். இவரின் படத்தில் எவ்ளோ ஆபத்தான ஆக்ஷன் காட்சிகள் இருந்தாலும் அதை தானே செய்வது தான் அவரின் வழக்கம். மேலும் 60 வயதானாலும் சினிமா மீது அவருக்கு இருக்கும் ஈடுபாடு பாராட்டக் கூடியது என்றும் தெரிவித்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்