Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Captain Movie Review in Tamil : கோலிவுட்டில் ஏலியனா..... போராடும் கேப்டன்...! படம் எப்படி இருக்கு?

Manoj Krishnamoorthi September 08, 2022 & 18:30 [IST]
Captain Movie Review in Tamil : கோலிவுட்டில் ஏலியனா..... போராடும் கேப்டன்...! படம் எப்படி இருக்கு?Representative Image.

மிருதன், டிக் டிக், டெடி போன்ற படத்தின் மூலம் வித்தியாசமான கதைகளைக் களத்தில் இறக்கும் இயக்குநர் என்ற அந்தர்ஸ்த்தைக் கொண்ட இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் மற்றும் ஆர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளிவந்த "கேப்டன்" படம் எப்படி இருக்குனு அறிந்து கொள்ள இந்த பதிவை பின்தொடரவும்.

கதைக்களம் (Captain movie review in tamil)

ஒரு அடர்ந்த காட்டு பகுதிக்குள் செல்லும் ஒவ்வொரு மனிதரும் உயிர் இழக்க அதை கண்டுபிடிக்க வரும் இராணுவ குழுவின் கேப்டன் தான் ஆர்யா. மர்மான முறையில் நடக்கும் மரணத்தின் காரணத்தை ஆர்யாவின் குழு கண்டுபிடித்ததா? என்பதே மையக்கதை ஆகும்.

திரை பார்வை (Captain movie review in tamil)

புதுமையான திரைப்படங்களைக் கொடுத்து மக்களின் கற்பனையை திரையில் காட்டும் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் ஆவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த மிருதன் திரைப்படத்திற்கு பிறகு தான் தமிழ் சினிமாவில் ஜாம்பி என்ற ஜார்னல் திறக்கப்பட்டது. அதேபோல ஒரு புதிய முயற்சியாக ஆர்யா, சிம்ரன், ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி நடிப்பில் வெளிவந்த "கேப்டன்" திரைப்படமாகும்.

எல்லைப் பகுதியான ஒரு அடர்ந்த காட்டிற்குள் செல்லும் இராணுவ வீரர்கள் இறப்பது ஏலியன்களால் என்பதை அறிந்த பிறகு ஆர்யாவின் தலைமையில் ஒரு இராணுவ குழு ஏலியன்களைக் கொல்ல அந்த காட்டு பகுதி செய்யும் முயர்சிகள் தமிழ் சினிமாவிற்கு புதிய அறிமுகம் ஆகும். இமானின் இசை படத்தில் இனிமையாக இருந்து விருவிருப்பை தந்து திரைப்படத்தின் கரத்தை உயர்த்தி உள்ளது.  எலியன்களை தத்ரூபமாகக் காட்டுவதில் ஒளிப்பதிவாளர் யுவா திறமையாக படத்தில் பத்ட்டமான சூழலை உணர வைத்துள்ளார்.

கதையில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் வரும் சிம்ரன் தன் முக்கியத்துவத்தை  கதைக்கு ஏற்றவாறு கொடுத்துள்ளார், ஆனால் பலமான நெகட்டிவ் கதாபாத்திரமாக வடிவமைத்திருந்தால் கதையில் சுவாரஸ்யம் அதிகரித்திருக்கும். ஆர்யா உடன் வரும் கதாபாத்திரத்திற்கு தேவையான கதாபாத்திரம் கொஞ்சம் குறைவாக இருப்பதால் சற்று கதை விருவிருப்பில் குறைந்தது.

மேலும், இந்த திரைப்படம் 80களில் ஹாலிவுட் வந்த பிரிடேட்டர் திரைப்படத்தில் வருவதைப்போல ஏலியன்களை வேட்டையாடுவது போல் தத்துரூப்பான முயற்சிகள் இருந்திருந்தால் கேப்டன் இன்னும் கம்பீரமாக இருந்திருக்கும். 

திரைக்கதை- 3/5

கதை- 3/5 

இசை- 3.5/5

ஒளிப்பதிவு- 4/5

இயக்கம்- 3/5

இதுவரை மேற்கத்திய மொழிகளில் வெளிவந்த ஏலியன் கலாச்சாரத்தை நம் பாரத்தில் வனத்தில் உலவிட்டது பாராட்டக்குறியது. புதுமையான ஜார்னலில் படபார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு ஆர்யாவின் "கேப்டன்"   நல்ல தேர்வாகும்.

இதுபோன்ற பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: Captain movie review in tamil | Captain tamil movie review | Captain movie review tamil | Captain movie review arya | Captain tamil review | கேப்டன் திரை விமர்சனம்

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்