Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சந்திரமுகி 2வில் ஹீரோயின் இவரா? சரிபட்டு வருமா?

Udhaya Kumar July 09, 2022 & 17:53 [IST]
சந்திரமுகி 2வில் ஹீரோயின் இவரா? சரிபட்டு வருமா?Representative Image.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வாசு இயக்கும் படம் சந்திரமுகி 2. ரஜினிகாந்த், ஜோதிகா,பிரபு உள்ளிட்ட பலர் நடித்து வேற லெவலுக்கு பேசப்பட்ட படம் சந்திரமுகி. இந்த படம் வெளியான போதே தமிழகம் முழுக்க பேசப்பட்டது. ரஜினியை விட மிக நன்றாக நடித்திருந்ததாக ஜோதிகா மற்றும் வடிவேலு ஆகியோருக்கு பெயர் கிடைத்தது. 

வடிவேலு இருந்தால் அந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்கிற சென்டிமெண்ட்டும் சரி என நிரூபிக்கப்பட்டது. இப்படி ஏகப்பட்ட விசயங்களைக் கொண்ட சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகவுள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பது யார் என கேள்வி எழுந்துள்ளது. 

வாசு இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தில் கீரவாணி இசையமைக்கவுள்ளார். வடிவேலு மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை லைகா புரொடக்ஷன் தயாரிக்கிறது. இதில் ராகவா லாரன்ஸ் வேட்டையன் ராஜாவாக நடிக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க திரிஷா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா என இவர்களில் யாராவது ஒருவர் நடிப்பார் எனவும் நாயகியாக ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எனவும் தகவல் வெளியானது. 

இவர்களில் யாரும் படத்தில் நடிக்க சம்மதிக்காத பட்சத்தில் சாய் பல்லவி நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது லட்சுமி மேனனையும் நடிக்க வைக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.  இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்