Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விக்ரம் படத்தின் வசூல்... சென்னையில் அடித்து நொறுக்கிய கமல்ஹாசன்...!

Udhaya Kumar July 12, 2022 & 16:46 [IST]
விக்ரம் படத்தின் வசூல்... சென்னையில் அடித்து நொறுக்கிய கமல்ஹாசன்...!Representative Image.

கமல்ஹாசனின் தீவிர பக்தனாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ள லோகேஷ் கனகராஜ், தனது நான்காவது படத்திலேயே அவரை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். 

தனது ஆஸ்தான நாயகனை கதாநாயகனாகக் கொண்டு அவரே தயாரிப்பாளராகவும் இருக்கும் படத்தை இயக்கும் அவரை வேற லெவலுக்கு காட்ட வேண்டும் என்ற முனைப்போடு, தனது விக்ரம் படத்தை அணு அணுவாக ரசித்து உருவாக்கியுள்ளார் 

கடந்த ஜூன் 3ம் தேதி வெளியான இந்த படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா, நரேன், செம்பன் வினோத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் சுமார் 700 கோடி அளவுக்கு மொத்த வியாபாரம் இருந்துள்ளது. 

உலக அளவில் 500 கோடி வசூலை நெருங்கி வருகிறது. கமல்ஹாசனுக்கு மட்டும் 230லிருந்து 250 கோடி வரை வருமானம் கிடைத்திருக்கும் என கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடி ரூபாய் அளவுக்கு லாபம் மட்டுமே கிடைத்திருக்கிறது என கூறப்படுகிறது.  

சென்னையைப் பொறுத்தவரையில் அனைத்து திரையரங்கிலும் 4 வாரங்கள் ஹவுஸ்புஃல்லாக ஓடிய இந்த திரைப்படம்,  பின்னர் தினமும் 2 ஷோக்கள் என இன்று வரை ஓடிக்கொண்டிருக்கிறது.  இதுவரை சென்னையில் 17 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்