Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சூர்யா 41 படத்தின் பஸ்ட் லுக் போஸ்ட்டர் வெளியீடு....டைட்டில் வெறித்தனமா இருக்கே...!

madhankumar July 11, 2022 & 18:25 [IST]
சூர்யா 41 படத்தின் பஸ்ட் லுக் போஸ்ட்டர் வெளியீடு....டைட்டில் வெறித்தனமா இருக்கே...!Representative Image.

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் "எதற்கும் துணிந்தவன்" வெளியானது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் வெளியான "விக்ரம்" படத்தில் வில்லனாக கேமியோ ரோலில் "ரோலக்ஸ்" கதாபாத்திரத்தில் நடித்திருந்திருந்தார்.

அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இயக்குனர் பாலா இயக்கத்தில் படம் ஒன்று நடிக்கவிருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியிருந்தது, அதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார், சூர்யா ஜோதிகாவின் 2D என்டர்டின்மெண்ட் நிறுவனம் படத்தி தயாரிக்கிறது.

இந்நிலையில் இயக்குனர் பாலா பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு"சூர்யா41" படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. அதன்படி "வணங்கான்" என்ற டைட்டிலுடன் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. திரைக்கு பின்னல் நின்றுகொண்டு சூர்யா முறைத்து பார்ப்பது போன்று அந்த போஸ்டர் அமைந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்