Tue ,Jun 25, 2024

சென்செக்ஸ் 77,341.08
131.18sensex(0.17%)
நிஃப்டி23,537.85
36.75sensex(0.16%)
USD
81.57
Exclusive

சினிமா ரசிகர்கள் தயாரா?... நாளை முதல் சென்னையில் கொண்டாட்டம் ஆரம்பம்!

KANIMOZHI Updated:
சினிமா ரசிகர்கள் தயாரா?... நாளை முதல் சென்னையில் கொண்டாட்டம் ஆரம்பம்!Representative Image.

சென்னையில், நாளை (15-ம் தேதி) சர்வதேச திரைப்பட விழா துவங்கி, 22-ம் தேதி வரை நடக்கிறது. இவ்விழாவில் திரையிடப்படும் படங்களில், பா.ரஞ்சித் இயக்கிய 'நட்சத்தி நகர்கிறது', பார்த்திபன் இயக்கிய 'சிங்கிள் ஷாட்' படம் 'இரவின் நிழல்', விஜய் சேதுபதி-சீனு ராமசாமியின் 'மாமனிதன்' உள்ளிட்ட 12 படங்கள், பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

சென்னை பி.வி.ஆர். காம்பளக்ஸ் தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் சர்வதேச திரைப்பட விழா நாளை முதல் 22 வரை எட்டு நாட்களுக்கு நடைபெறுகிறது.20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா (CIFF), சென்னையில் நாளை (டிசம்பர் 15) முதல் 22 வரை நடைபெற உள்ளது. விழாவில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்கள் உட்பட 51 நாடுகளில் இருந்து 102 படங்கள் திரையிடப்படுகின்றன.

தமிழக அரசின் ஆதரவுடன், இந்தோ சினி அப்ரிசியேஷன், பிவிஆர் சினிமா ஆகியவை இணைந்து, இந்த திரைப்பட விழாவை நடத்துகிறது. நாளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் துவங்கும் இந்த விழாவை தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைக்கிறார்.

தகுதியான தமிழ் படங்களுக்கு CIFF-ல் போட்டி பிரிவு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 12 தமிழ் படங்கள் இந்த பிரிவில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதில் மூன்று படங்கள சிறந்த படங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள 12 தமிழ் படங்களில் கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'கார்கி', பா.ரஞ்சித்-ன் 'நட்சத்திரம் நகர்கிறது'. பார்த்திபனின் 'இரவின் நிழல்', விஜய் சேதுபதி-சீனு ராமசாமியின் 'மாமனிதன்', ராம்நாத் பழனிகுமாரின் 'ஆதார்', சிம்புதேவனின் ஆந்தாலஜி படமான 'கசடதபற', வைபவ் நடித்த 'பபூன்', மனோ வீ கண்ணதாசனின் 'இறுதி பக்கம்', நயன்தாரா நடித்த 'ஓ2' ஆகியப் படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 'கடைசி விவசாயி', 'மாலைநேர மல்லிப்பூ', 'போத்தனுார் தபால் நிலையம்' ஆகிய படங்களும் திரையிடப்பட உள்ளன

ஆஸ்கர், கேன்ஸ், கோல்டன் லயன் விருது விழாவில் திரையிடப்பட்ட படங்கள், சென்னையில் நடக்கும் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. 'ஏஇஐஒயு' என்ற ஜெர்மன் படம், பெண்களுக்கு பிரத்யேக காட்சியாக திரையிடப்பட உள்ளது. 

இந்தமுறை தமிழுக்கு என ஒன்பது விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன. எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லுாரி மாணவர்கள் தயாரித்த ஒன்பது குறும்படங்கள், சென்னையில் நடக்கும் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. ஒரியா, சமஸ்கிருத மொழி படங்களும், முதன்முறையாக திரையிடப்பட உள்ளன.

மேலும், கலை இலக்கிய துறை சார்ந்த வல்லுனர்கள் பங்கேற்கும் 12 கலந்தாய்வு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 'பொன்னியின் செல்வன்', 'பீஸ்ட்', 'இரவின் நிழல்' படங்களில் பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுனர்களும் பங்கேற்று பேச உள்ளனர். அதோடு இன்னும் வெளியாகாத 'பிகினிங்', 'யுத்த காண்டம்', மற்றும் ''ஆடு' ஆகியவை அதிகாரப்பூர்வ தேர்வில் இடம்பெற்றுள்ளன. இவைகள் சிறந்த திரைப்பட விருதுக்கு போட்டியிடும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்