Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காஷ்மீருக்கு செல்லும் விஜய், லோகேஷ்...! வேற லெவல் பிளான்...! | Thalapthy 67 shooting location update latest

UDHAYA KUMAR Updated:
காஷ்மீருக்கு செல்லும் விஜய், லோகேஷ்...! வேற லெவல் பிளான்...! | Thalapthy 67 shooting location update latestRepresentative Image.

விஜய் தற்போது பரபரப்பாக உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தை வெளியிடுவது குறித்த பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். தளபதி 67 என அழைக்கப்படும் இந்த படத்தினை வரும் ஜனவரியில் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக கடந்த வாரம் இப்படத்தின் பூஜை அமைதியாக நடைபெற்றது. 

தளபதி 67 படத்தை லலித் தயாரிக்கவுள்ளதாகவும், அதனை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும் முன்னதாக தகவல் வெளியாகியிருந்தது. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. வாரிசு படத்தின் ரிலீசுக்குப் பிறகே இந்த தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.  ஆனால் படபூஜையில் கலந்து கொண்ட நபர்கள் பற்றிய தகவலும் வெளியாகியிருந்தது. 

தளபதி 67 படத்தின் ஆரம்ப கட்ட வேலைகளை இயக்குநர் லோகேஷ் துவங்கிவிட்டதாகவும், ஜனவரி 2வது வாரம் முதல் விஜய் படப்பிடிப்புக்கு தயாராவார் எனவும் கூறப்பட்ட நிலையில், கமல்ஹாசனும் இந்த படத்தில் கேமியோ செய்ய இருக்கிறார் என்கிறார்கள்.  படப்பிடிப்பு முதலில் சென்னையில் துவங்குகிறதாம். 10 நாட்களில் முதல் ஷெட்யூலை முடித்துக் கொண்டு அடுத்த ஷெட்யூலுக்கு காஷ்மீர் செல்லவுள்ளதாம் தளபதி 67 படக்குழு. 

இந்த படமும் LCU எனப்படும் லோகேஷ் சினிமா உலகத்தைச் சேர்ந்ததுதான் என்று கூறும் அவர்கள் இந்த படத்தை கமல்ஹாசன் தனது RKFI பட நிறுவனம் மூலம் இணைந்து தயாரிக்கவுள்ளாராம். லலித்துடன் சேர்ந்து இந்த படத்தை தயாரிக்கும்போது கேமியோ அப்பியரன்ஸ் செய்யவுள்ளார் எனவும் பல்வேறு பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் இதனை கமல்ஹாசன் தயாரிக்கவில்லை என்பது மட்டும் இப்போது தெளிவாகியிருக்கிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்