Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Cobra Tamil Movie Release Date: ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பு.... சியான் விக்ரமின் கோப்ரா ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

Nandhinipriya Ganeshan May 20, 2022 & 21:25 [IST]
Cobra Tamil Movie Release Date: ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பு.... சியான் விக்ரமின் கோப்ரா ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!Representative Image.

Cobra Tamil Movie Release Date: இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்க, நடிகர் சியான் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் "கோப்ரா". கொரோனா தொற்று பரவல் காரணமாக படத்தின் படப்பிடிப்பு நீண்ட காலமாக தள்ளிப் போனது. தற்போது, இப்படத்தின் மூன்று வருட படப்பிடிப்பு ஒரு வழியாக இந்த ஆண்டு பிப்ரவரியில் நிறைவடைந்தது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோப்ராவின் டீஸர் வெளியானது. அதில் விக்ரம் ஒரு கணித மேதையாக நடிக்கிறார் என்றும், அவர் கணித ஃபார்முலாவை பயன்படுத்தி குற்றங்களைச் செய்ததற்காக சர்வதேச புலனாய்வு அமைப்புகளாய் தேடப்படுகிறார் என்றும் படத்தின் ஓரளவு கதையை சொல்லியிருந்தார்கள். 

மேலும், சியான் பல வேடங்களில் நடிப்பதில் சற்றும் தயங்காத சிறந்த நடிகர். தனது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுப்பதற்காக தனது உடலை வறுத்தி திறமையான நடிகர். தற்போது Cobra திரைப்படத்தில் விக்ரம் 7 கெட்டப்பில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. 

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் மியா, ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிக்குமார், கிரிக்கெட் வீரர் இர்பான், கனிகா, பத்மப்ரியா ஜானகிராமன், ரோஷன் மேத்யூ, ஷாஜி சென் ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நீண்ட நாட்களாக ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த கோப்ர படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோப்ரா (Vikram's Cobra) வருகின்ற ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. 

மேலும், பொன்னியின் செல்வன் என்ற இரண்டு பாகங்கள் கொண்ட பீரியட் டிராமாவின் முதல் பாகத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறாராம் விக்ரம். மணிரத்னம் எழுதி இயக்கியுள்ள இப்படம் இந்த ஆண்டு செப்டம்பரில் திரைக்கு வர உள்ளது. 

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்