Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அனிருத்தை திருமணம் செய்ய சம்மதித்த ஜோனிட்டா காந்தி! ஆனால்?

UDHAYA KUMAR June 06, 2022 & 18:59 [IST]
அனிருத்தை திருமணம் செய்ய சம்மதித்த ஜோனிட்டா காந்தி! ஆனால்?Representative Image.

தமிழ் திரையுலகின் தற்போது அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சூர்யா, அஜித், விஜய், கமல், ரஜினி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என வரிசையாக அனைத்து பெரிய நாயகர்களுக்கும் அனிருத் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இவரது இசையில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய அளவில் வசூலை குவித்து வருகின்றது. 

அனிருத் எத்தனை படங்களுக்கு இசையமைத்தாலும், அத்தனை படங்களிலும குறைந்தது 2, 3 ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். விரைவில் நேரடி தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்துள்ள அனிருத்துக்கு அடுத்தும் ஒரு கமல் படம், ரஜினி படம், அஜித் படம், விஜய் படம் என வரிசையாக காத்திருக்கிறது. 

சமீபகாலமாக அனிருத், ஜோனிட்டா காந்தி ஆகியோர் காதலிப்பதாக தகவல் வெளியாகி பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜோனிட்டா காந்தியிடம்  கேட்கப்பட்ட கேள்விக்கு அனிருத்தை திருமணம் செய்ய சம்மதிப்பதாக தெரிவித்துள்ளார். இது ஒரு விளையாட்டான பதில் எனவும் அவர் குறிப்பால் உணர்த்தியுள்ளார். அவரிடம் சூர்யா, ரன்வீர் சிங், அனிருத் மூவரில் யாரைத் திருமணம் செய்வீர்கள் என்கிற கேள்விக்கு இதுவரை திருமணம் ஆகாத ஒரே காரணத்துக்காக அனிருத்தை திருமணம் செய்ய சம்மதிப்பேன் எனக் கூறியுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்