Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

20 நிமிசத்தை வெட்டித் தூக்கிய கோப்ரா படக்குழு! இப்ப படம் எப்படி இருக்கு?

UDHAYAKUMAR September 01, 2022 & 13:00 [IST]
20 நிமிசத்தை வெட்டித் தூக்கிய கோப்ரா படக்குழு! இப்ப படம் எப்படி இருக்கு?Representative Image.

விக்ரம் நடிப்பில் கோப்ரா படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகி, கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகிறது. விமர்சகர்கள் கூறும் பெரிய மைனஸ், கோப்ரா படத்தின் நீளம்தான்.  விமர்சகர்களோ படத்தோட நீளம்தான் மக்களின் பொறுமையைச் சோதிக்கிறது எனவும், இதனால் படத்தின் நீளத்தைக் குறைக்கவேண்டும் என்பது போலவும் பேசி வருகின்றனர். இதனை கோப்ரா தயாரிப்பு குழுவின் காதுக்கும் சிலர் கொண்டு சென்றுள்ளனர். 

இந்நிலையில் பிரச்னையை உணர்ந்த கோப்ரா படத்தயாரிப்பு குழு, படத்தை கட் செய்ய ஒப்புக்கொண்டது. படத்திலிருந்து 20 நிமிட காட்சிகளை டிரிம் செய்து படத்தை மீண்டும் திரையிட முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்று மாலை  காட்சி முதல் டிரிம் செய்யப்பட்ட படம் திரையரங்குகளில் ஒளிபரப்பாகும். 

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். விக்ரமுடன் 3 கதாநாயகிகளும் நடித்துள்ளனர்.  அவருடன் தென்னிந்தியா முழுமைக்கும் சென்று புரமோசன் பணிகளிலும் கலந்துகொண்டனர்.  20 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டதால், படத்தின் லேக் கொஞ்சம் குறைந்துள்ளது எனவும், படம் விறுவிறுப்பாக இருக்கப்போகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்