Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிம்புவின் பத்து தல படத்தை பற்றிய மாஸ் அப்டேட் | Pathu Thala First Single

Priyanka Hochumin Updated:
சிம்புவின் பத்து தல படத்தை பற்றிய மாஸ் அப்டேட் | Pathu Thala First SingleRepresentative Image.

சிம்பு அவர்கள் நடிக்கும் "பத்து தல" படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் நாளை மாலை வெளியாகும் என்று படத்தின் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். அது குறித்த விவரங்களை முழுமையாக பாப்போம்.

பல வருடங்களுக்கு பிறகு நடிகர் சிம்பு அவர்கள் தொடர்ந்து படங்களை நடித்து வருகிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் "மாநாடு" படத்தில் நடித்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் "வெந்து தணிந்தது காடு" வேற லெவல் ஹிட் தந்தது.

இப்படி தெளிவாக தேர்ந்து நடிக்கும் சிம்புவின் அடுத்த படம் "பத்து தல". இப்படத்தை ஜில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கியுள்ளார். மேலும் ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மஃப்டி என்னும் கன்னட படத்தின் ரீமேக்காக எடுக்கப்படும் இந்த படம் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் வரும் மார்ச் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

படம் ரிலீஸை நெருங்கும் வகையில் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் மற்றும் முதல் பாடல் வெளியாகும் நாள் குறித்த அப்டேட்கள் நாளை அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்