Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 72,722.71
-677.07sensex(-0.92%)
நிஃப்டி22,091.55
-180.95sensex(-0.81%)
USD
81.57
Exclusive

அஜித் மீது பரபர புகார்.. என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

UDHAYA KUMAR Updated:
அஜித் மீது பரபர புகார்.. என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?Representative Image.

ஒரு கோடி இழப்பீடு கேட்டு நடிகர் அஜித், ரெட் ஜெயண்ட் நிறுவனம் ஆகியோர் மீது அதிரடியாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ரசிக போதையில் அவர்களே போய் விழுந்து மரணமடைந்திருப்பதற்கு அஜித் எப்படி பொறுப்பாவார் என ரசிகர்கள் பேசி வருகின்றனர். அதுமட்டுமின்றி அஜித் இதுபோன்ற ரசிக போதையைத் தான் வெறுக்கிறார் எனவும் கூறுகின்றனர். 

அஜித்குமார் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கிய துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது.  அஜித் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி இந்த படத்தை வரவேற்றனர். சென்னையிலும் இந்த கொண்டாட்டம் வேற லெவலில் இருந்தது. நள்ளிரவே கூடி கொண்டாடி மகிழ்ந்தனர் ரசிகர்கள். சென்னை ரோகினி திரையரங்கில் துணிவு படம் பார்க்கச் சென்ற அஜித் ரசிகர் ஒருவர் டேங்கர் லாரி மீது ஏறி ஆடி தவறி விழுந்து இறந்தார். 

இதுகுறித்து ஆன்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அஜித்குமார் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தலா ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என புகாரளிக்கப்பட்டுள்ளது.  சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் இந்த புகாரை அளித்துள்ளார். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்