Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜூனியர் என்டிஆர்-ன் வரவிருக்கும் திரைப்படங்களின் பட்டியல்..! | Jr. NTR Upcoming Movies 2023

Gowthami Subramani Updated:
ஜூனியர் என்டிஆர்-ன் வரவிருக்கும் திரைப்படங்களின் பட்டியல்..! | Jr. NTR Upcoming Movies 2023Representative Image.

ஜூனியர் என்டிஆர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர். இவர் தெலுங்கு மட்டுமல்லாமல், RRR படத்தின் மூலம் கவனம் பெற்று பெரும்பாலான மொழிகளில் இவர் மிகவும் பிரபலமானார். இவரது மாஸான நடிப்புத் திறமையால், ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளார்.

மிகப்பிரமாண்டமான படைப்பில் உருவான RRR படமானது ராஜமௌலியால் உருவாக்கப்பட்டது. RRR படத்தைத் தவிர இவர்கள் இருவரும் முன்னரே இரண்டு திரைப்படங்களில் ஒருங்கிணைந்துள்ளனர். அதில் ஒன்று 2003-ல் வெளிவந்த திரைப்படமான சிம்ஹாத்ரி, 2007-ல் வெளியான யமடொங்கா ஆகும். இந்த திரைப்படங்கள் அனைத்தும் ஹிட் அடித்து பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை அள்ளித் தந்தது.

தமிழ் மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள் (Junior NTR Movies List In Tamil)

இவரது உண்மையான பெயர் ராமராவ். இவர் ரசிகர்களால் ஜூனியர் என்.டி.ஆர் என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இவரது 20 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் 29-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். அதில் சில படங்கள் தமிழ் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது. அதன் படி, ஜூனியர் என்டிஆர் தமிழ் மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள் பட்டியலை இதில் காணலாம்.

தெலுங்கு மொழியில் படங்களின் பெயர்கள்

தமிழ் மொழியில் மாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்களின் பெயர்கள்

ஜெய் லவகுஷா

சகோதரர்கள்

ஊசரவல்லி

டோனி

ஆந்திரவாலா

வேலா

நிதானம்

இன்ஸ்பெக்டர் தயா

யமடோங்கா

விஜயன்

சக்தி

ஓம் சக்தி

சம்பா

சம்பா

காந்த்ரி

போக்கிரி பையன்

அரவிந்த் சமேதா

இது என்னோட ஜில்லா

நா.அல்லுடு

மதுரை மாப்பிள்ளை

பிருந்தாவனம்

பிருந்தாவனம்

ஆர்.ஆர்.ஆர்

ஆர்.ஆர்.ஆர்

 

ஜூனியர் என்டிஆர் விருதுகள்

இவர் ஒரே டேக்கில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்துவார். இவரது நடனம் குறித்து சொல்லவே தேவையில்லை. RRR படத்தல் இவரது நடனத்திற்கே தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இவ்வாறு பல்வேறு திறமைகளைக் கொண்ட இவர், இரண்டு South Filmfare Awards, இரண்டு மாநில நந்தி விருதுகள், நான்கு CineMAA விருதுகளைப் பெற்றுள்ளார். அது மட்டுமல்லாமல், திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இவரும் ஒருவர்.

ஜூனியர் என்டிஆர்-ன் வரவிருக்கும் திரைப்படங்கள் 2023 & 2024 (Junior Ntr Upcoming Movies 2023)

படத்தின் பெயர்

வெளிவரும் ஆண்டு

Untitled with Koratala Siva

2023

Untitled with Prashanth Neel

2024

 

ஜூனியர் என்டிஆர் மற்றும் இயக்குநர் கொரட்டலா சிவா ஆகியோர் இணைந்து உருவாக உள்ள திரைப்படம் பேன் இந்தியா படம் ஆகும். மேலும், பிரசாந்த் நீல் உடன் இணைந்து உருவாக உள்ள திரைப்படம் மிகப்பெரிய அளவில் எடுக்க இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்