Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Dejavu Movie Explained In Tamil: சஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களுக்கு தேஜாவு செம ட்ரீட் தான்...!

Manoj Krishnamoorthi July 22, 2022 & 17:15 [IST]
Dejavu Movie Explained In Tamil: சஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களுக்கு தேஜாவு செம ட்ரீட் தான்...!Representative Image.

தமிழ் சினிமாவில் கம்ரசியல் ட்ராக்கில் நடக்கும் நடிகர்கள் ஒருபுறம் என்றால் வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து தன் நடிப்பாற்றலை வெளிக்காட்டும் கலைஞர்கள் ஒருபுறம் இருக்கின்றனர். அந்த வரிசையில் தன் ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதையைத் தேர்வு செய்து நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள அருள்நிதி நடிப்பில் வெளிவந்துள்ள 'தேஜாவு' திரைப்படம் பற்றிய ஒரு திரை பார்வை.  

கதைக்களம் (Dejavu Movie)

தமிழக காவல்துறை அதிகாரியின் மகளை மர்ம நபர்கள் கடத்த அவரை மீட்க அந்த கேஸ் அண்டர்கவர் காவல் துறை அதிகாரியிடம் செல்கிறது. தீவிரமான விசாரணையில் வெளிப்படும் முடிச்சுகள் ஒரு நல்ல திரில்லர் படத்துக்கான முயற்சி ஆகும். நல்ல வேகத்தில் நடக்கும் விசாரணையின் முடிவு தான் திரைப்படத்தின் முற்றாக அமைகிறது. 

திரை பார்வை (Dejavu Tamil Movie Review) 

கதையில் முக்கியமான கதாபாத்திரம் தமிழக காவல்துறை டிஜீபி அதிகாரியாக வரும் மதுபாலா, கதையின் ஆரம்பத்தில் காணாமல் போகிறார் அவலின் மகள் ஸ்மிருதி வெங்கட் அவருக்கு என்ன ஆனது..? அவர் மீட்கப்படுவாரா..?  என்ற கேள்வியுடன் திரைக்கதை தொடங்குகிறது. அவரை மீட்கும் கேஸ்  கதாநாயகன் அருள்நிதியிடம் செல்கிறது, அண்டர்கவர் காவலராகத் திரையில் காட்சியளிக்கும் அருள் நிதி திரையில் தோன்றிய மணித்துளி முதல் திரைக்கதை வேகமாக நகர தொடங்குகிறது.

போலீஸ் அதிகாரிக்கான உடல் பாவனைகளைத் த்த்துரூப்பமாக வெளிக்காட்டி நம்மை அவர் வழியில் கதைக்குள் நகர்த்தி சென்றும் ஒரு கட்டத்தில் திரைக்கதை தொய்வு நம்மை பயணிக்க முடியாதவாறு அமைந்தது ஒரு மைனஸாக அமைந்துள்ளது. படத்தின் மொத்த பலமாக அருள் நிதி இருந்தும் கதையில் இறுதியில் ஏற்படும் சிறிய தொய்வு நம்மை சற்று ஈர்க்கவில்லை.

கதையில் மற்ற கதாபாத்திரமாக வரும் ஸ்மிருதி வெங்கட், அச்யுத் குமார், சேத்தன், காளி கதைக்கு சரியான தேர்வாக அமைந்துள்ளனர். மேலும் கதையின் மிகப்பெரிய பலமாக ஜிப்ரானின் பின்னணி இசை அமைந்துள்ளது. தன் தனித்துவமான இசையில் படத்தின் திரில்லரை ஒரு படி மேலே கொண்டு சென்றுள்ளார் என்பது அனைவரும் ஏற்றுகொள்ளவர். 

திரையில் திரில்லர் சஸ்பன்ஸ் சற்று நகராது வகையில் சிறப்பான ஒளிப்பதிவு அமைந்தது தேஜாவு திரைப்படத்துக்கு இன்னொரு பலமாகும்.

திரைக்கதை- 3/5

கதை- 3/5

இசை- 4/5

ஒளிப்பதிவு- 4/5

இயக்கம்- 3/5    

புதிய கதைகளுக்கு என்றுமே மக்கள் மத்தியில் வரவேற்பு உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழ் திரைத்துறையில் பஞ்சமான திரில்லர் ஜார்னலில் வெளிவந்த தேஜாவு  நம் பொழுதுபோக்கை நன்றாக  செலவிடக் கூடிய தரமான படமாகும்.

இதுபோன்ற பொழுதுபோக்கு செய்திகளை  உடனுக்குடன்  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

TAG: Dejavu Movie Explained In Tamil | Dejavu Tamil Movie Review | Dejavu Movie Review In Tamil | Dejavu Arulnithi Movie Explained In Tamil | Dejavu Arulnithi Movie Story In Tamil | Dejavu Movie | Dejavu Arulnithi Movie Cast | Dejavu Arulnithi Movie Real Story

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்