Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தனுஷ் பிறந்தநாளில் அடுத்தடுத்து 7 அப்டேட்கள்! தெறிக்கும் இணையதளம்...!

UDHAYAKUMAR July 26, 2022 & 15:28 [IST]
தனுஷ் பிறந்தநாளில் அடுத்தடுத்து 7 அப்டேட்கள்! தெறிக்கும் இணையதளம்...!Representative Image.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவரது பல படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்து இப்போது நிச்சயமாக ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.  பட்டாஸ், ஜகமே தந்திரம், மாறன், அந்தாரங்கி ரே, தி கிரே மேன் உள்ளிட்ட அடுத்தடுத்து எல்லா படங்களும் பெரிய எதிர்பார்ப்பை கொண்டிருந்தது. ஆனால், அவற்றில் ஒரு படம் கூட ஆஹோ ஓஹோ என பேசப்படவில்லை. வசூல் ரீதியாகவும் தோல்வியடைந்த படமாகவே இருந்தது. 

இந்நிலையில்தான், அடுத்தடுத்த படங்களை தனுஷ் எதிர்பார்த்து காத்திருக்கிறார். 

முதல் அப்டேட்

தனுஷ், நித்யாமேனன், ராஷி கன்னா, பிரியா பவானிஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகவுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் 3வது சிங்கிள் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மாலை வெளியாகவுள்ளது.

இரண்டாவது அப்டேட்

தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பைலிங்குவல் படமாக உருவாகியுள்ள வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 28ம் தேதி காலை வெளியாகவுள்ளது. 

மூன்றாவது அப்டேட்

தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பைலிங்குவல் படமாக உருவாகியுள்ள வாத்தி படத்தின் டீசர் வரும் 28ம் தேதி மாலை வெளியாகவுள்ளது. 

4 வது அப்டேட்

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில்  உருவாகியுள்ள நானே வருவேன் படத்தின் டீசர் வரும் 28ம் தேதி மாலை வெளியாகவுள்ளது. 

5வது அப்டேட்

அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்திலிருந்து முக்கிய அப்டேட் ஒன்று வரும் ஜூலை 28ம் தேதி வரவுள்ளதாக கூறப்படுகிறது. 

6வது அப்டேட்

தனுஷ் - இளன் இணையும் புதிய படம் குறித்த தகவல் வெளியாக வாய்ப்பு

7வது அப்டேட்

வரும் ஜூலை 29ம் தேதி திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கவுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்