Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தி கிரே மேன் படத்தில் நடிகர் தனுஷ் எவ்வளவு சம்பளம் வாங்கிருக்காரு தெரியுமா...?

madhankumar July 15, 2022 & 18:50 [IST]
தி கிரே மேன் படத்தில் நடிகர் தனுஷ் எவ்வளவு சம்பளம் வாங்கிருக்காரு தெரியுமா...?Representative Image.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ், நடிகர், பாடலாசிரியர், பாடாகர், இயக்குனர், தயாரிப்பாளர், என பன்முக திறமை கொண்ட இவர் கோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட், ஹாலிவுட் வரை தனது கால் தடத்தை பதித்துள்ளார்.

அந்த வகையில் ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனர்கள் இயக்கத்திலும் மற்றும் முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து "தி கிரே மேன்" படத்தில் நடித்துள்ளார். இன்றும் நேற்றும் நடந்த இந்த படத்தின் விழாவில் நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் கலந்துகொண்டார். மேலும் இந்த படத்தை பார்த்துள்ள பலர் படம் மிகவும் நன்றாக உள்ளது தனுஷ் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் கூட பேசப்படக்கூடிய வகையில் ஆக்க்ஷன் காட்சிகளில் பிரமாதப்படுத்தியுள்ளார் என கூறிவருகின்றனர்.

மேலும் சமீபத்தில் அப்படத்தில் தனுஷ் முக்கிய நட்சத்திரங்களுடன் அவர் சண்டையிடும் காட்சியின் வீடியோ வெளியாகியிருந்தது. அதில் தனுஷ் அக்‌ஷனை கண்ட ரசிகர்கள் படத்தை பார்க்க அர்வமாக உள்ளனர். இந்நிலையில் The Gray Man தனுஷ் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் பரவி வருகிறது. அந்த வகையில் இப்படத்திற்காக தனுஷ் $ 500,000 சம்பளமாக பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த Chris Evans $ 15 million மற்றும் Ryan Gosling $ 10 million சம்பளமாக பெற்றுள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்