Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கும்பலங்கி நைட்ஸ் திரைப்படத்தில் தனுஷ்! பஹத் பாசில் சுவாரஸ்யம்...!

Udhaya Kumar July 19, 2022 & 11:53 [IST]
கும்பலங்கி நைட்ஸ் திரைப்படத்தில் தனுஷ்! பஹத் பாசில் சுவாரஸ்யம்...!Representative Image.

கும்பலங்கி நைட்ஸ் திரைப்படத்தில் தனுஷ் நடிப்பதாக  பஹத் பாசில் கூறிய சுவாரஸ்யமான தகவல் இணையதளத்தில் பரவி வருகிறது. 

மலையாள திரைப்படங்களிலேயே தனக்கென தனி ரசிக பட்டாளத்தைக் கொண்டது கும்பலங்கி நைட்ஸ் திரைப்படம். இந்த படத்தை கேள்விப்படாதவர்கள் மிகக் குறைவு என்றே சொல்லலாம். இந்த படத்தில் பஹத் பாசில் ஷமி எனும் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருப்பார். இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது தனுஷ் தானாம். அவரை மனதில் வைத்துதான் இந்த கதாபாத்திரத்தை எழுதியுள்ளனர். ஆனால் மிக அதிக பட்ஜெட் தேவைப்படும் என்பதால் தனுஷை நடிக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டு திட்டம் கைவிடப்பட்டதாம். அவருக்கு பதில் இந்த கதாபாத்திரத்தை பஹத் பாசில் ஏற்று நடித்தாராம். 

பஹத் பாசில் தற்போது நடித்து வெளியாகவுள்ள மலையன்குஞ்சு படத்தின் புரமோசனுக்காக பல நிறுவனங்களுக்கும் பேட்டி அளித்து வருகிறார்.  இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த சஜிமோன் பிரபாகரன் இந்த படத்தை இயக்குகிறார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்