Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தளபதி விஜய் படத்தில் முன்னணி நடிகர் கேமியோ! உண்மை என்ன?

UDHAYA KUMAR June 10, 2022 & 12:38 [IST]
தளபதி விஜய் படத்தில் முன்னணி நடிகர் கேமியோ! உண்மை என்ன?Representative Image.

தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் கேமியோ செய்யவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படம் மெகாஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி தெலுங்கு மாநிலங்கள், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் வேற லெவலுக்கு மாஸாக களமிறங்கி உள்ளூர் படங்களுடன் போட்டி போட்டு வசூல் சாதனை புரிந்து வருகிறது. 

லோகேஷ் கனகராஜின் அயராத உழைப்புக்கு அன்பு பரிசாக கார் ஒன்றையும் அவரது உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் தலா ஒரு பைக் என அன்பு காட்டினார் தயாரிப்பாளரும் நடிகருமான கமல்ஹாசன். விக்ரம் பட புரமோசன்களின்போதே மீண்டும் அடுத்தடுத்து இன்னும் நிறைய படங்கள் கமல்ஹாசனுடன் லோகேஷ் பணிபுரிவார் என்பது போல பேசப்படுகிறது. 

விக்ரம் திரைப்படத்தைத் தொடர்ந்து சில வார இடைவெளியிலே அடுத்த படத்தை துவங்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். விஜய்யிடம் சொல்லப்பட்ட கதைக்கு முழு வடிவம் கொடுக்கும் பணியில் விரைவில் ஈடுபடஉள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்திலும் இரண்டு கதாநாயகர்களுக்கு ஸ்கோப் உள்ளது போன்றே கதை இருப்பதாகவும், இரண்டையும் விஜய்யே நடிப்பதாகவும் அரசல் புரசலாக தகவல் வெளிவந்தது. ஆனால் இதுகுறித்து இப்போது எதுவுமே பேசமுடியாது, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரட்டும் என அமைதி காத்து வருகிறார் லோகேஷ். 

ஒருபக்கம் லோகேஷ் விக்ரம் படத்தை முடித்துவிட்ட நிலையில், அந்த பக்கம் விஜய் தனது அடுத்த படத்தை வம்சியுடன் சேர்ந்து உருவாக்கி வருகிறார். தளபதி 66 என்றழைக்கப்படும் இந்த படத்தின் டைட்டில் விஜய் பிறந்த நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லோகேஷ் கனகராஜ் படத்தின் அப்டேட்டும் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. 

லோகேஷ் கனகராஜ் படத்தில் விஜய்யுடன் இன்னொரு முன்னணி கதாநாயகன் நடிக்கவிருப்பதாக கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. அது தனுஷாக இருக்கலாம் என கொளுத்தி போட, தனுஷ் ரசிகர்கள் அதை உண்மை என நம்பி கொண்டாடி வந்தனர். ஆனால் சில மணி நேரங்களிலேயே இது புரளி என்பது தெரியவந்தது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்