Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெற்றி பாதைக்கு திரும்பும் தனுஷ்...தொடர் வெற்றிகளை கொடுப்பாரா..? ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

madhankumar July 28, 2022 & 13:37 [IST]
வெற்றி பாதைக்கு திரும்பும் தனுஷ்...தொடர் வெற்றிகளை கொடுப்பாரா..? ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!Representative Image.

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் வெளியான படம் "கர்ணன்" இதையடுத்து 4 படங்கள் அடுத்தடுத்து வெளியாகியிருந்தாலும் அவை யாவும் ஓடிடியில் நேரடியாக வெளியாகின. அவற்றில் முதலில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான "ஜகமே தந்திரம்" நேரடியாக நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

இதனையடுத்து பாலிவுட்டில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவான "அத்ராங்கி ரே" ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. அடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான "மாறன்" அதென்ன ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் அறிமுகமான படம் "தி கிரே மேன்" இதனை ரூசோ பிரதர்ஸ் இயக்கியிருந்தனர், மிகவும் குறைந்த நேரம் மட்டுமே தனுஷ் வந்தாலும் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது, இருப்பினும் நெட்ப்ளிக்சின் தயாரிப்பு என்பதால் இப்படம் நேரடியாக அந்த ஓடிடி தளத்தில் வெளியானது.

இப்படி வரிசையாக ஓடிடியில் தனது படங்களை கொடுத்துவந்த நிலையில் அவரது ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்துவந்னர். தி கிரே மேன் ஹாலிவுட் படம் என்பதால் மட்டும் ரசிகர்கள் இதனை ஆவலுடன் காத்திருந்து பார்த்தனர் என கூறலாம் ஆனால், மற்ற மூண்டு படங்களும் ஓரளவிற்கு சுமாரான வரவேற்பையே பெற்றது. மேலும் கிரே மேன் அப்படத்தின் இரண்டாம் பாகமும் முக்கிய கதாபாத்திரத்திற்கான தனி படமும் உருவாக்க உள்ளது, அதில் தனுஷ் இருக்க அதிக வாய்ப்புகள் உளது என கூறப்பட்டுள்ளது.

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என அணைத்து பிரிவுகளிலும் தனது கால்தடத்தை பதித்த நடிகர் தனுஷ் அடுத்ததாக மித்ரன் ஜவகர் இயக்கத்தில் "திருச்சிற்றம்பலம்" படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுதான் கர்ணன் படத்தை அடுத்து திரையரங்கில் வெளியாகும் தனுஷ் படமாகும் இதனால் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். மேலும் இந்த படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதனையடுத்து தனுஷ் அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் "நானே வருவேன்" படத்தில் நடித்து முடித்துள்ளார். வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதில் தனுஷ் கதாநாயகன் மற்றும் வில்லன் என இரட்டை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். செல்வராகவன் இயக்குவதோடு மட்டுமில்லாமல் இப்படத்தில் நடிக்கவும் செய்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெரும் இதுவரை யாரும் செய்யாத கதாபாத்திரமாக இது இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் "வாத்தி" படத்தில் நடிகர் தனுஷ் அடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார், ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார், தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (ஜூலை 27) படத்தின் பர்ஸ்ட் ஃலுக் போஸ்டர் வெளியானது, இதனையடுத்து இன்று காலை செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு வாத்தி படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. நானே வருவேன் படத்தை தொடர்ந்து இந்த படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தனுஷ் "ராக்கி" "சாணிக்காயிதம்" ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் "கேப்டன் மில்லர்" என பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தில் நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படம் 1930களில் நடப்பது போல் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனுஷுக்கு இதில் 3 தோற்றங்கள் இருப்பதாகவும் 2 பாகமாக படம் உருவாகும் என தகவலால் வெளியாகியுள்ளது. "திருச்சிற்றம்பலம்" "நானே வருவேன்" "வாத்தி" ஆகிய படங்களை தொடர்ந்து இந்த படம் வெளியாக வாய்ப்புகள் உள்ளது.

விமர்சன ரீதியாகவோ ரசிகர்களை திருப்தி படுத்தாத வகையில் ஓடிடியில் படங்களை கொடுத்துவந்த நடிகர் தனுஷ் வரிசையாக திரையரங்குகளில் வெளியாகும் இந்த படங்களின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்புவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்