Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தனுஷ் என்னம்மா நடிக்குறார்யா...! அஞ்சும் அஞ்சி ரகம்...!

UDHAYAKUMAR July 28, 2022 & 12:51 [IST]
தனுஷ் என்னம்மா நடிக்குறார்யா...! அஞ்சும் அஞ்சி ரகம்...!Representative Image.

அடுத்த சூப்பர் ஸ்டார் யாருன்னு எல்லாரும் ஓடிக்கிட்டு இருந்தப்ப, அடுத்த உலக நாயகனா இறங்கி வந்து அடிச்சிருக்காரு தனுஷ். உண்மையிலேயே உலகம் முழுக்க பல ரசிகர்களுக்கு பரிட்சியமா பல விசயங்கள செஞ்சிருக்காரு மனுசன். ஒய் திஸ் கொலவெறி டி பாட்டுல ஆரம்பிச்சு ரௌடி பேபி வரைக்கும் அத்தனை சாதனைகள். 

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட்னு வேற லெவலுக்கு படங்கள பண்ணிட்டே போயிருக்காரு. பாலிவுட், ஹாலிவுட்ல பெரிய வெற்றி இல்லைனாலும் கமலுக்கு அப்றம் ஹிந்தியில பெயர் பெற்ற தமிழ் நடிகர் அப்படிங்குற புகழ் அவருக்கு கிடச்சிருக்கு. ரஜினி மாதிரியே படு வேகத்துல புகழ் பெற்று வராரு. நல்ல கண்டென்ட் இருக்குற படங்களையும் தந்துட்டு இருக்காரு. படத்துக்கு படம் வித்தியாசமா நடிச்சி ரசிகர்களையும் மக்களையும் கவர்ந்துட்டு இருக்காரு. 

அவரோட தனித்துவமான நடிப்ப நீங்க தெரிஞ்சிக்கணும்னா இந்த 5 படங்களையும் பாருங்க. 


காதல் கொண்டேன்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் காதல் கொண்டேன். தனுஷுடன் சோனியா அகர்வால், நாசர், டேனியல் பாலாஜி, ஸ்ரீகாந்த் மேகா உள்ளிட்டோர் நடிச்சிருப்பாங்க.  யுவன்சங்கர் ராஜா இசையில பாடல்கள் எல்லாம் வேற லெவலுக்கு இருக்கும். 

தனுஷோட நடிப்பு இந்த படத்துல வித்தியாசமா நம்ம பக்கத்து வீட்டு பையன் ஒரு சாதுவான கேரக்டர்னு இருக்கும். அதுவே ஆக்ரோசமா மாறும்போது வர்ற மாறுபாடு சூப்பரா ஒர்க்கவுட் ஆகியிருக்கும். 

புதுப்பேட்டை

தனுஷ், சோனியா அகர்வால், சிநேகா உள்ளிட்டோர் இணைந்து நடித்த புதுப்பேட்டை படமும் செல்வராகவன் இயக்கத்தில் வெளியானதுதான். வெளியான சமயத்தில் பெரிய அளவில் பேசப்படாமல் இருந்த படம் சமீப காலங்களில் வேற லெவலுக்கு பேசப்பட்டு வருகிறது. தனுஷின் நடிப்பு மிகவும் பாராட்டப்படுகிறது. 


யாரடி நீ மோகினி

தனுஷ், நயன்தாரா சேர்ந்து நடித்த யாரடி நீ மோகினி படத்தின் கதையே மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும்.  பலரையும் கவர்ந்த இந்த கதையில் தனுஷின் கதாபாத்திரம் சராசரி இளைஞனுக்கும் பொருந்திப் பார்க்கும் வகையில் அமைந்திருக்கும். இண்டர்வியூ காட்சி போலவே நம் வாழ்வில் வந்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும் படத்தில் இடம்பெற்றிருக்கும். 

மரியான்

தனுஷ், பார்வதி ஆகியோருக்கு இடையேயான காதல் காட்சிகள், இருவரும் பிரிந்து அவதியுறும் காட்சிகள் என அனைத்தும் தனுஷின் நடிப்பால் எலிவேட் ஆகியிருக்கும்.  பரத் பாலா இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் வேற லெவல் பாடல்கள், காட்சிகள் என அனைத்தும் ரசிகர்களுக்கு பிடித்திருக்கும். படம் பெரிய அளவில் போகவில்லை ஆனாலும் ரசிகர்களின் ஃபேவரைட் படமாக இது இருக்கிறது. 

வட சென்னை

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வட சென்னை. பழிக்கு பழி நடக்கும் கொலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் இதுவாகும்.  இதிலும் தனுஷின் நடிப்பு பிரமாதமாக வெளிப்பட்டிருக்கும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்