Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தளபதி விஜய், இயக்குநர் ஷங்கர் பட தயாரிப்பாளரின் குறிப்பிட்ட ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடியாம்! வேற லெவல் போங்க..

Udhaya Kumar July 09, 2022 & 18:30 [IST]
தளபதி விஜய், இயக்குநர் ஷங்கர் பட தயாரிப்பாளரின் குறிப்பிட்ட ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடியாம்! வேற லெவல் போங்க.. Representative Image.

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தமிழ் தெலுங்கு பை லிங்குவல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். வாரிசு என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ. இந்த படத்தின் நான்காவது கட்ட படப்பிடிப்பு துரித கதியில் நடைபெற்று வருகிறது. 

இதே தயாரிப்பாளரின் மற்றொரு படத்தில் தெலுங்கு நாயகன் ராம் சரண் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இந்த திரைப்படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார்.  

ஷங்கர், விஜய் படங்களின் தயாரிப்பாளரான தில் ராஜு, இரண்டு படங்களின் ஓவர்சீஸ் ரைட்ஸுக்காக 65 கோடி ரூபாய் கேட்பதாக கூறப்படுகிறது. ஷங்கர் மற்றும் விஜய் இருவருமே பிசினஸில் பெரிய புள்ளிகள். இவர்களின் படங்கள் பெரிய அளவில் வியாபாரம் ஆகும்.

 கூடவே ராம்சரணும் இருப்பதால் இரண்டு படங்களையும் சேர்த்து குறைந்தபட்சம் 60 கோடி அளவுக்காவது விற்றுவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ராம் சரண், ஷங்கர் திரைப்படம் வெளிவர தாமதமாகும் என்பது தெரியவந்துள்ள நிலையில், விஜய் - வம்சி திரைப்படம் மிக விரைவில் முடிந்துவிடும் என கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்