Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,466.40
613.46sensex(0.83%)
நிஃப்டி22,590.25
187.85sensex(0.84%)
USD
81.57
Exclusive

ஆண் குழந்தையை பெற்றெடுத்த அட்லீ - பிரியா மோகன் | Atlee Priya Baby

Priyanka Hochumin Updated:
ஆண் குழந்தையை பெற்றெடுத்த அட்லீ - பிரியா மோகன் | Atlee Priya BabyRepresentative Image.

குஷியில் அட்லீ மற்றும் பிரியா மோகன், இருவரும் தங்களின் ஆண் குழந்தையை மகிழ்ச்சியாக இந்த உலகத்திற்கு வரவேர்த்தனர். தன்னுடைய முதல் படமான ராஜா ராணி படத்தின் மூலம் அனைவரின் மனதை வென்றார் திரைப்பட இயக்குனர் அட்லீ. அதனை தொடர்ந்து அடுத்து வெளியான தளபதி விஜய்யின் மூன்று ஹிட் படங்களையும் இவர் தான் இயக்கியுள்ளார். இப்படி திரைப்பட பயணத்தில் பல ஹிட்களைத் தந்த அட்லீ 2014 ஆம் ஆண்டு நடிகை பிரியாவை திருமணம் செய்துக் கொண்டார்.

தங்களின் காதலின் அடையாளமாக 2022 ஆம் ஆண்டு பிரியா கர்பமாக இருப்பதை தெரிவித்தார். இவர்களின் வளைகாப்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. தளபதி விஜய் உள்ளிட்ட பெரும் நடிகர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அப்படி இருக்கையில் நேற்று மாலை அட்லீ அவர்கள் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இவர் தற்போது ஷாருக்கான் வைத்து ஜவான் என்னும் ஹிந்தி படத்தை இயக்கி வருகிறார். அப்படத்தில் தளபதி விஜய் அவர்கள் இடம் பெறுவார் என்றும் கூறப்படுகிறது. பலரும் எதிர்பார்க்கும் இப்படம் ஜூன் 2, 2023 அன்று வெளியாகும் என்று கூறியுள்ளனர். மேலும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கண்டம், மலையாளம் என்று ஐந்து மொழிகளில் வெளியாகிறது.   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்