Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

படம் தயாரியுங்கள் விஜய்.. வேண்டுகோள் வைத்த இயக்குநர்!

Aruvi Updated:
படம் தயாரியுங்கள் விஜய்.. வேண்டுகோள் வைத்த இயக்குநர்!Representative Image.

சென்னை: நடிகர் விஜய் திரைப்படங்களை தயாரிக்க வேண்டுமென இயக்குநர் சீனு ராமசாமி வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் லியோ அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக மாறியிருக்கும் லியோ பான் இந்தியா படமாக உருவாகிறது. இதன் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தச் சூழலில் தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளை விஜய் சந்திக்கும் விஜய் கல்வி விருது வழங்கும் விழா கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது.

நீலாங்கரையில் நேற்று நடந்த விழாவில் விஜய் பயங்கர க்யூட்டாக கலந்துகொண்டார். மாணவ, மாணவிகளுடன் அவர்களது பெற்றோரும் வந்திருந்தனர். யாரிடமும் முகம் சுளிக்காமல் அவர்களது சின்ன சின்ன கோரிக்கைகளை நிறைவேற்றி தன்னை ஒரு பக்குவப்பட்ட மனிதராக மேடையில் காண்பித்துக்கொண்டார் என ரசிகர்கள் புகழாரம் சூட்டிவருகின்றனர். மேலும் 13 நேரத்தில் கிட்டத்தட்ட 10 மணி நேரம்வரை விஜய் நின்றுகொண்டே சான்றிதழையும், ஊக்கத்தொகையையும் வழங்கினார்.

படம் தயாரியுங்கள் விஜய்.. வேண்டுகோள் வைத்த இயக்குநர்!Representative Image

நிகழ்ச்சியில் அசுரன் பட வசனத்தை பேசிவிட்டு பேச்சை தொடங்கிய விஜய் பெரியார், அம்பேத்கர், காமராஜரை படியுங்கள் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் நீங்கள்தான் நாளைய வாக்காளர்கள். பணம் வாங்காமல் வாக்கு செலுத்த உங்கள் தந்தை, தாயிடம் எனவும் கூறினார். அவரது பேச்சு பலரிடம் பாராட்டை பெற்றாலும் சிலர் அதை விமர்சிக்கவும் செய்தனர். குறிப்பாக கல்வி தொடர்பான விழாவில் வாக்கு, வாக்காளர்கள் என கூறியதெல்லாம் அவரது அரசியல் ஆசையை அப்பட்டமாக காட்டியிருக்கிறது என்று ஓபனாகவே பேசினர்.

இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “கல்விக்கு ஊக்க கண் திறக்கும் 'நண்பா' இளைய தளபதி விஜய். உங்களை வாழ்த்துகிறேன். தங்கள் நடிப்பில் புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு தந்தது போல் தமிழ்ச் சினிமாவுக்கு செழுமை சேர்க்க வரும் புதியவர்களின் Content Based Realistic படங்களை தயாரித்து சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர  வேண்டுகிறேன்” என வேண்டுக்கோள் வைத்திருக்கிறார்.

விஜய் இப்போது லியோ படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் இருக்கிறார். சமீபத்தில் 2000 டான்ஸ்டர்களுடன் அவர் நடனமாடும் காட்சி படமாக்கி முடிக்கப்பட்டது. அவரது பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி படத்திலிருந்து நா ரெடி என்ற சிங்கிள் பாடல் வெளியாகவிருக்கிறது. லியோ படத்துக்கு பிறகு ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68ஆவது படத்தில் நடிக்கிறார் விஜய்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்