Mon ,May 20, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

Eeramana Rojave 2 Today Episode: சுமங்கலி பூஜைக்கு வர மறுத்த காவ்யா...இவர்களின் divorce எல்லாருக்கு தெரிய வருமா? விறுவிறுப்பான திருப்பங்களுடன்!

Priyanka Hochumin June 10, 2022 & 18:00 [IST]
Eeramana Rojave 2 Today Episode: சுமங்கலி பூஜைக்கு வர மறுத்த காவ்யா...இவர்களின் divorce எல்லாருக்கு தெரிய வருமா? விறுவிறுப்பான திருப்பங்களுடன்!Representative Image.

Eeramana Rojave 2 Today Episode: இன்று ஈரமான ரோஜாவே 2 இல் நடந்த அதிர்ச்சி நிகழ்வுகள். இதனால் பார்த்திபன் காவ்யா பிரிய நேரிடுமா தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கடந்த எபிசோடுகள் | Eeramana Rojave 2 Serial 

இந்த வாரம் முழுவதும் ஜீவா பிரியா ஜோடிகளை விட பார்த்திபன் காவ்யா ஜோடிகள் மக்கள் மிகவும் மகிழ்வித்துள்ளனர். ஜீவா காவ்யா காதலை தெரிந்துகொண்ட ஜீவாவின் மாமா, காவ்யாவை நினைவு பொருட்கள் அனைத்தையும் எரித்து சாம்பலாக்குகிறார். இந்த துக்கத்தை தாங்க முடியாத ஜீவா, தனது மாமாவுடன் மது வருந்துகிறான். பிறகு நிதானம் இல்லாமல் வீட்டுக்கு சென்று தூங்கும் பொழுது, பிரியா ஜீவா நெஞ்சில் பச்சை குதியிருப்பதை பார்க்கிறாள். ஆனால் 'கா' என்னும் எழுத்து மட்டும் அவளுக்கு தெரிவதால், அந்த குழப்பத்தை தீர்க்க அடித்த நாள் ஜீவாவிடம் 'நீங்க காதலிச்ச பொண்ணோட பேர் என்ன?' என்று கேட்கிறாள். உடனே திகைத்து போன ஜீவா, ஏன் இப்படி திடீர்னு கேட்குறீங்க என்று கேட்க, அவள் நடந்ததை கூறுகிறாள். அவன் எதுவும் சொல்லாமல், எப்படியோ சமாளித்து தப்பித்து சென்று, அவனின் மாமாவிடம் இந்த பிரச்னையை கூறுகிறான். அவர் உடனே ஜீவாவிடம், பேசாம அத அழுச்சிரலாம் என்று கூறுகிறார். காவ்யா நியாபகமா இருக்குறது இது ஒன்னு மட்டும் தான், இப்ப இதையும் அளிக்குமா? என்று ஜீவா துக்கத்துடன் யோசிக்கிறான். பிறகு தனது குடும்பத்தின் நிம்மதிக்காக அந்த யோசனையை ஏற்றுக் கொண்டு காவ்யா பெயரை அளித்து விடுகிறான்.

இதன் காரணமாக ஜீவாவுக்கு நன்கு காய்ச்சல் அடிக்க, பிரியா ஜீவாவை ஒரு குழந்தை போல் பார்த்து கொள்கிறாள். இதனை பார்த்த பார்வதி, நான் கூட ஜீவாவ இப்படி பார்த்தது இல்லை, நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கனும் என்று கண்ணீருடன் வாழ்த்துகிறாள். ஜீவாவும் பிரியாவின் கவனிப்பை பார்த்து மெய்மறக்கிறான். பிறகு பிரியா ஜீவாவின் நெஞ்சில் இருக்கும் காயத்தை பார்க்கிறாள், பதறி போய் என்னது என்று கேட்கிறாள். ஜீவா 'உங்க முன்னாடி இன்னொரு பொண்ணோட பெயர நா பச்சை குத்திருக்குறது உங்களுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்குன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது, அதான் நான் அழிச்சிட்டேன்' என்று கூறுகிறான். இதனை கேட்டதும் பிரியாவுக்கு அளவில்லா சந்தோசம். நீங்க எனக்காக இவ்ளோ யோசிச்சது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு, இப்ப அந்த பொண்ணோட பேர எடுத்துடீங்க, கூடிய சீக்கிரம் அந்த பொன்னையும் உங்க மனசுல இருந்து வெளியே எடுத்துடுவீங்கன்னு நான் நம்புறேன் என்கிறாள்.

இவங்க இப்படின்னா அங்குட்டு பார்த்திபன் காவ்யா, இப்ப நல்லா இருக்கு அவங்கள பார்க்க. பாரதியின் கடைசி தம்பி, காவ்யா தன்னுடைய அண்ணனை அவமான படுத்துவதை பொறுக்க முடியாமல் காவ்யாவிடம் சென்று பேசுகிறான். நீங்க எப்படி உங்க அப்பா அம்மாக்காக இந்த கல்யாணம் பணிக்கிடீங்களோ, எங்க அண்ணனும் அப்படி தான. என்னமோ உங்கள வலுக்கட்டாயமா கல்யாணம் பணிகிட்ட மாறி நடந்துக்குறீங்க. இதையெல்லாம் எங்க அண்ணன் யாருகிட்டயும் சொல்லாம, பாவம் தனியா கஷ்ட பட்டுட்டு இருக்காரு. இனிமே இப்படி நடந்துக்காதீங்க என்று சொல்லிவிட்டு செல்கிறான். இதை கேட்டதும் காவ்யா சற்று வருந்துகிறாள். பிறகு அருணாச்சலம் மற்றும் பார்வதி காவ்யாவிடம், இவர்களின் வாழ்க்கையை பற்றி அறிவுரை சொல்ல, பிறகு காவ்யா பார்த்திபனுடன் ஒரே ரூமில் தங்க சம்மதிக்கிறாள். பிறகு இருவரும் சின்ன குழந்தைகள் போன்று சண்டை போடுவது, அதை சமாளிப்பது என்று பார்க்கும் ஆடியன்ஸ்களுக்கு ஒரு புது உணர்வை ஏற்படுத்துகிறது.

இன்றைய எபிசோடு | Eeramana Rojave 2 Today Episode

பார்வதியும் மஹாவும் கோவிலில் சந்தித்து பேசுகின்றனர். நம்முடைய பிள்ளைங்க நல்லா சந்தோசமா எப்ப தான் இருக்க போறாங்களோ தெரியல என்று பேசிக்கொண்டிருக்க, பார்வதி உடனே ஒரு சுமங்கலி பூஜை செஞ்சா எல்லாம் நல்லா நடக்கும் என்று சொல்கிறாள். மஹாவும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருவரும் நம்பிக்கையுடன் செல்கின்றனர். வீட்டுக்கு சென்றவுடன் பார்வதி பிரியா மற்றும் காவ்யாவிடம் இந்த செய்தியை கூறுகிறாள். காவ்யா வழக்கம் போல் படிக்கணும் என்ற காரணத்தை சொல்ல, இவர்கள் அவளை வற்புறுத்தி சம்மதிக்கின்றனர்.

அன்று இரவு பார்த்திபன் ரூம்மிற்குள் வர, காவ்யா படித்து முடித்துவிட்டு தூங்க தயாராகிறாள். பிறகு அவர்களின் திருமண போட்டோவை திருப்பி வைக்கிறாள். பார்த்திபன் உடனே, நாம்ப ஃபிரண்ட்ஸ் தானே அந்த எண்ணம் இருக்கும் பொழுது நீ ஏன் அந்த போட்டோவ திருப்பி வைக்கிற. உனக்கு ஒரு பயம் வருதுன்னு நினைக்கிறன் என்று சொல்கிறான். காவ்யா எனக்கு என்ன பயம் என்று கேட்க? இல்ல அந்த போட்டோவ பார்க்கும் போதெல்லாம் நம்ப அவருடைய பொண்டாட்டி, அவர் என்னோட புருஷன்னு உனக்கு தோணுது போலையே என்கிறான் பார்த்திபன். பிறகு சிறு குழந்தைப் போல் அவனிடம் சண்டை போட்டுக்கொண்டு இருவரும் தூங்குகின்றனர். பிறகு அடுத்த நாள் பிரியா அவர்களின் கல்யாண ஆல்பம் கொண்டு வந்து காவ்யாவிடம் காண்பித்து மகிழ்ச்சியடைகிறாள். காவ்யா கடுப்பாகி நான் படிக்கணும் அப்புறம் பார்க்கிறேன் என்று சொல்கிறாள். அவள் எல்லாவற்றையும் யோசித்து ஒரு முடிவுக்கு வருகிறாள், அது என்னென்னா தன்னுடைய காதல் கதையை பார்த்திபனிடம் சொல்லவேண்டும் என்ற முடிவுக்கு வருகிறாள். தன்னுடைய IAS கிளாஸ்-க்கு செல்லும் வழியில் தன்னுடைய மொபைல் போனை துளைத்து விடுகிறாள். நாள் முழுவதும் ஒரே கவன சிதைவுடன் இருக்கிறாள். அங்கு வீட்டில் சுமங்கலி பூஜைக்கு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறுகிறது. தேவியும் அவளுடைய மகளும் வைத்தெறிச்சலில் இருகின்றனர். பிறகு இவர்களின் நிம்மதியை கெடுக்க வந்து கண்டமேனிக்கு உதறிவிட்டு சென்றுவிடுகின்றனர்.

அடுத்த வாரம் | Vijay TV Latest Promo 

வீட்டில் சுமங்கலி பூஜை ஏற்பாடுகள் முடிந்து அனைவரும் இருக்கும் சமயத்தில் காவ்யா இன்னும் வீட்டிற்கு வரவில்லை. இதை காரணம் கொண்டு தேவி காவ்யா இந்த கல்யாணம் பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடிவிட்டாள் என்று சொல்லி அனைவரையும் டென்ஷன் ஏற்றுகிறாள். பிறகு பார்த்திபனோ காவ்யா அப்படி எல்லாம் செய்ய மாடல் என்று அவளை தேடி அவள் படிக்கும் இடத்திற்கு செல்கிறான். அங்கு காவ்யா ஒரு அறையில் மாட்டிக்கொள்கிறாள். பார்த்திபன் சரியான நேரத்திற்கு வந்து பார்க்க, காவ்யா மயங்கிய நிலையில் தரையில் விழுந்து கிடக்கிறாள்.  பயந்து போன பார்த்திபன் காவ்யாவை தூக்கிக்கொண்டு செல்கிறான். இதுதான் முடிந்துவிட்டது, அடுத்து என்ன நாடாகும் என்பதை தெரிந்துகொள்ள அடுத்த வாரம் வரை காத்திருக்கவும்.   

உடனுக்குடன் செய்திகளை (Serial Updates) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.  

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்