Mon ,Apr 22, 2024

சென்செக்ஸ் 73,648.62
560.29sensex(0.77%)
நிஃப்டி22,336.40
189.40sensex(0.86%)
USD
81.57
Exclusive

Eeramana Rojave 2 Today Episode: மாமியாருக்கு தெரிஞ்சு போச்சு...இனி காவ்யா என்ன செய்ய போகிறாள்? பரபரப்பான திருப்பங்களுடன்

Priyanka Hochumin July 13, 2022 & 17:15 [IST]
Eeramana Rojave 2 Today Episode: மாமியாருக்கு தெரிஞ்சு போச்சு...இனி காவ்யா என்ன செய்ய போகிறாள்? பரபரப்பான திருப்பங்களுடன்  Representative Image.

Eeramana Rojave 2 Today Episode: நல்லா குளு குளுன்னு போயிட்டிருந்த சீரியல்ல இப்ப பல எதிர்பாராத திருப்பங்கள் நடந்துட்டு இருக்கிறது. வாருங்கள் பார்க்கலாம்.

உங்களுக்கு தெரிந்தது போன்று சீரியலில் கதை இழுக்க முடியவில்லை என்றால் உடனே ஒரு சாமியார், பரிகாரம் மற்றும் பூஜை ஆகியவற்றை உள்ளே இழுத்துவிடுவார்கள். இங்கையும் அதே போன்று பரிகாரம் பூஜை  பாதையாத்திரை என்று பார்த்திபனின் தாய் பார்வதி காவ்யாவின் மனசு மாறணும்னு செய்யறாங்க. தனக்காக தன்னுடைய மாமியார் இப்படி கஷ்டப்படுறதை பார்த்து காவ்யா மிகவும் வருந்துகிறாள். இதையெல்லாம் பார்த்து காவ்யாவுக்கு ஒரே பீதி, எங்க தன்னுடைய மனசை இவங்க எல்லாம் சேர்ந்து மாத்திடுவாங்களோ என்று நினைக்கிறாள்.

நீங்கள் கவனித்திருப்பீர்கள் இவர்களின் திருமணம் நடந்த பிறகு, மாதம் ஒரு முறை வீட்டில் இருக்கும் ஒருவருக்கு காவ்யா ஜீவாவின் காதல் கதை தெரியவருகிறது. முதலில் காவ்யாவின் தாய், பிறகு ஜீவாவின் மாமா. அதே போன்று இந்த மதமும் யாருக்காவது தெரிய படுத்தனும் என்று முடிவெடுத்துள்ளனர். இதற்கு வெளியில் இருந்து ஒரு ஆளை இருங்குகின்றனர், அது யாருன்னா? பார்வதி அவர்களின் தோழி. அவர் ஒரு புது கடை திறக்க போவதாகவும், அதற்காக பார்வதி மற்றும் அவளின் கணவரை அழைக்க இவர்கள் வீட்டுக்கு வருகிறார்.

வந்துட்டு திரும்ப செல்லும் பொழுது காவ்யா வீட்டிற்குள்ளே செல்வதை பார்க்கிறார். பார்த்தவுடன் இவருக்கு ஒரே ஷாக், என்னடா இது இப்ப தான் கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி வேற ஒரு பையன் கூட என்னோட கடைக்கு வந்தா இப்ப இவங்க வீட்டுக்குள்ள போறா என்று ஒரே குழப்பம். அப்பொழுது பார்த்து பார்வதி வெளிய வர, ஆமா யார் அது உள்ள போறது என்று கேட்கும் பொழுது, அதுவா அது என்னோட மூத்த மருமகள் என்று கூறுகிறாள். பிறகு எதுவும் சொல்லாமல் அப்படி செல்கிறார்.

பிரியா ஜீவாவின் துணியை ஐயன் செய்து கொண்டிருக்கையில், ஒரு போன் கால். அது யாருன்னா ப்ரியாவை திருமணத்தில் இருந்து தூக்கிட்டு போன நரேன். ஜெயிலில் இருந்து தப்பித்து, பிரியா ஆசிரமத்தில் இருந்து ஒரு குழந்தையை கடத்தி, பிரியாவை பணம் கேட்டு மிரட்டுகிறான். ஒரு பதட்டமாக இருக்கும் பிரியாவை பார்த்து ஜீவா என்ன பிரச்சனை என்று கேட்க, ஒன்னும் இல்லை என்று சமாளிக்கிறாள். பிறகு என்ன செய்யலாம் என்று யோசித்திடு இருக்கிறாள் பிரியா. அங்கு காவ்யா மற்றும் பார்த்திபன் இடையே ஒரு அழகான தருணம் நடைபெறுகிறது. பிறகு காவ்யா பார்த்திபனிடம் வரும் ஞாயிறு அன்று தனக்கு சமைத்து தருமாறு சவால் விடுகிறாள். பார்த்திபன் அதற்கு சம்மதிக்கிறான்.

தன்னுடைய தோழியின் கடை திறப்பு விழாவிற்கு சென்ற பார்வதியிடம் காவ்யா தன்னுடைய காதலனுடன் இருந்ததை கூறுகிறார். இதை கேட்டு அதிர்ச்சியான பார்வதி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போய் நிற்கிறார். பிறகு வீட்டிற்கு சென்று காவ்யாவிடம் யாரையாவது காதலிச்சியா, அதனால தான் பார்த்திபனை ஏத்துக்க மாட்டேங்கிறியா என்று கேட்கிறாள். அழுதுகொண்டு என்ன சொல்வதென்று தெரியாமல் காவ்யா நிற்கிறாள். 

Eeramana rojave 2 serial, eeramana rojave 2 today episode, eeramana rojave 2 episodes, vijay tv latest promo, 

உடனுக்குடன் செய்திகளை (Serial Updates) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்