Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Cine News : பிரபல நடிகர் கொலை..! நடந்தது என்ன்..?

Muthu Kumar June 19, 2022 & 15:40 [IST]
Cine News : பிரபல நடிகர் கொலை..! நடந்தது என்ன்..?Representative Image.

Cine News : பிரபல கன்னட நடிகர் சதீஷ் வஜ்ரா நேற்றிரவு மர்ம நபர்களால் குத்திக் கொல்லப்பட்டார்.

கர்நாடகா மாநிலத்தின் மாத்தூரை சேர்ந்த பிரபல கன்னட நடிகர் சதீஷ் வஜ்ரா பல கன்னட படங்களில் துணை நடிகராகவும், லகோரி என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், பெங்களூர் ஆர்.ஆர் நகர் பகுதியில் வசித்து வந்த சதீஷின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சதீஷை பயங்கர ஆயுதங்களால் கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த சதீஷை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து, காவல்துரையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்த விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சதீஷ் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து, இவர்களுக்கு இடையில் நடந்த தகராரில் அப்பெண் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், அந்த பெண் வீட்டார் கோபத்தில் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற அடிப்படையில் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்