Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

BMW பைக்கில் ஊர் சுற்றும் அஜித்...புகைப்படங்கள் வைரல்..!

madhankumar June 18, 2022 & 14:48 [IST]
BMW பைக்கில் ஊர் சுற்றும் அஜித்...புகைப்படங்கள் வைரல்..!Representative Image.

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத இயக்கத்தில் பெயர் வைக்கப்படாத "AK61' படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிவடைந்துள்ள நிலையில், மிகுந்த களைப்பில் இருக்கும் அவர் ஊர் சுற்றலாம் என முடிவெடுத்துள்ளார். BMW பைக்கை எடுத்துக்கொண்டு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அஜித்குமார், ஹீமா குரேஷி நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது ஏகே61 என்ற திரைப்படம் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித்குமார் இரட்டை வேடங்களில் கலக்கி வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் நடந்துவந்த இந்த படத்தின் படப்பிடிப்பு, அஜித் நடிக்கும் 90 சதவிகித காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மற்ற நடிகர், நடிகைகளின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனக்கு கிடைத்த ஓய்வு நாட்களை சுவாரசியமாக மாற்றிக் கொள்ள நடிகர் அஜித்குமார், இங்கிலாந்து சென்றுள்ளார். அங்குள்ள தெருக்களில் சர்வசாதாரணமாக பைக் டிரிப் அடித்துக் கொண்டிருக்கிறார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்