Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அனுமனுடன் படம் பார்க்க 2000 ரூபாயா..? இதெல்லாம் ரொம்ப ஓவர்!!

Aruvi Updated:
அனுமனுடன் படம் பார்க்க 2000 ரூபாயா..? இதெல்லாம் ரொம்ப ஓவர்!!Representative Image.

டெல்லி: பாகுபலி புகழ் பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆதிபுருஷ் படத்தின் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் விலை 2000 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஓம் ராவத் இயக்கியிருக்கும் படம் ஆதிபுருஷ். பாகுபலி மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்த பிரபாஸ் இப்படத்தில் நடித்திருக்கிறார். ராமாயணத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் சைஃப் அலிகான், கீர்த்தி சனோனி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஹிந்தி,தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக நாளை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

அனுமனுடன் படம் பார்க்க 2000 ரூபாயா..? இதெல்லாம் ரொம்ப ஓவர்!!Representative Image

மொக்கை வாங்கிய டீசர்:

ஆதிபுருஷ் படத்தின் முதல் டீசரில் கிராஃபிக்ஸ் காட்சிகள் படு மொக்கையாக இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்தனர். அதனையடுத்து 100 கோடி ரூபாய் செலவில் கிராஃபிக்ஸ் தரத்தை உயர்த்தும் பணியில் படக்குழு இறங்கியது. அப்படி இருந்தும் அடுத்து வெளியிடப்பட்ட ட்ரெய்லரும் கலவையான விமர்சனத்தையே பெற்றது.

அதனையடுத்து சமீபத்தில் படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியானது. இதுவும் கலவையான விமர்சனததையே பெற்றது. இந்தச் சூழலில் படத்தின் ப்ரீ பிஸ்னெஸ் இதுவரை 400 கோடி ரூபாய்க்கும் மேல் நடந்திருப்பதாக தகவல் வெளியாகி ஆச்சரியப்படுத்தியது.

எல்லாமும் அனுமனுக்கு

நிலைமை இப்படி இருக்க அமெரிக்காவில் ஓட்டப்படும் ஷோக்களில் தமிழ் மொழி ஷோவுக்கு மொத்தமே 24 டிக்கெட்டுகள்தான் புக்காகியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்தத் தகவல் பொய்யானது. படத்துக்கான புக்கிங் சிறப்பாக நடந்து வருவதாக ஆதிபுருஷ் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். பல ஷோக்கள் ஹவுஸ் ஃபுல் ஆகியிருப்பதாகவும் கூறுகின்றனர்.

அனுமனுடன் படம் பார்க்க 2000 ரூபாயா..? இதெல்லாம் ரொம்ப ஓவர்!!Representative Image

ஆதிபுருஷ் முதல் ஷோ டிக்கெட் விலை

இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தின் டிக்கெட் விலை குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது டெல்லியில் இருக்கும் பிவிஆர் வேகாஸ் லக்ஸ் திரையரங்கில் ஆதிபுருஷ் முதல் ஷோவுக்கான டிக்கெட் விலை 2000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றும், நொய்டாவில் இருக்கும் பிவிஆர் கோல்ட் லாஜிக்ஸ் சிட்டி சென்ட்டரில் டிக்கெட் விலை 1650 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் புதிய தகவல் வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அனுமனுக்கு பக்கத்து சீட்

இதற்கிடையே அனுமனுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டுக்கு பக்கத்து சீட்டுக்கான டிக்கெட் விலை அதிகளவில் விற்கப்படுவதாகவும் ஒரு தகவல் வெளியானது. ஆனால் அதனை படத் தயாரிப்பு நிறுவனம் திட்டவட்டமாக மறுத்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்