Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அவதார் 2 படத்தில் நடித்துள்ள டைட்டானிக் நடிகை....பஸ்ட் லுக் வெளியீடு..!

madhankumar July 01, 2022 & 15:59 [IST]
அவதார் 2 படத்தில் நடித்துள்ள டைட்டானிக் நடிகை....பஸ்ட் லுக் வெளியீடு..!Representative Image.

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாக்கி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தில் நாவி இன பெண்ணாக டைட்டானிக் படத்தில் நடித்த நடிகை கேட் வின்ஸ்லெட் நடித்துள்ளார்.

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் - 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம், 20th செஞ்சுரி ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படம் இந்தியாவில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் டிசம்பர் 16 2022 அன்று வெளியாகிறது. இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் நாவி இன பெண்ணாக கேட் வின்ஸ்லெட் நடித்துள்ளார். தற்போது அவரின் பஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

ரொனால் ந பெயரிடப்பட்டுள்ள அவரின் இந்த கதாபாத்திரம் மிகவும் விசுவாசமான, மற்றும் அச்சமற்ற தலைவர் என்பதை குறிக்கும் என கேட் வின்ஸ்லெட் கூறியுள்ளார். மேலும் இந்த ரொனால் மிக கடுமையாக நிலையிலும் தனது வயிற்றில் இருக்கும் குழந்தை உடனும், தனது இந மக்களுடன் இணைந்து போராடுபவள் என கூறியுள்ளார். இந்த படத்தில் அவர் சாம் வொர்திங்டன், ஜோ சல்டானா மற்றும் சிகோர்னி வீவர் ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார்.

அவதார்-2வில் தனது கதாபாத்திரத்திற்காக, வின்ஸ்லெட் நீருக்கடியில் அதிக நேரம் மூச்சைப் பிடிக்கக் கற்றுக்கொண்டு நடித்துள்ளார். மேலும், திரைப்படத்தில் நீருக்கடியில் நீண்ட நேரம் மூச்சைப் அடக்கியபடி நடித்த நடிகர் டாம் குரூஸின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். கேட் வின்ஸ்லெட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி மிக பெரிய வெற்றியை பெட்ரா டைட்டானிக் படத்தில் நடித்து மிகவும் புகழ் பெற்றார். 

இந்நிலையில் 25 ஆண்டுகள் கழித்து ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 2009 ஆண்டு வெளியானது, தற்போது 13 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. மேலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்