Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 74,014.23
8.29sensex(0.01%)
நிஃப்டி22,534.20
32.20sensex(0.14%)
USD
81.57
Exclusive

இலக்கியா கைது... பின்னணியில் நடந்த சதி.. அதிர்ச்சியில் குடும்பம்! Ilakkiya 28 december 2022

UDHAYA KUMAR Updated:
இலக்கியா கைது... பின்னணியில் நடந்த சதி.. அதிர்ச்சியில் குடும்பம்!  Ilakkiya 28 december 2022Representative Image.

கௌதமிடம் இலக்கியா சம்மதித்து விட்டதாக கூறுகிறார். ஜோசியர் என்ன இந்த அம்மா பொய் சொல்றாங்க என பார்த்துவிட்டு, கல்யாணம் நடந்தா சரிதான் என்கிறார். இப்போது கௌதம் யோசிக்க ஆரம்பிக்கிறார். எப்படியும் கோபத்தில் இரண்டு வார்த்தை பேசிவிட்டு உங்க இஷ்டம்மா என கிளம்பிவிடுகிறார். 

அடுத்து திருமண ஏற்பாடுகள் விரைந்து நடக்கின்றன. அங்கு இலக்கியாவின் அம்மா, தம்பி, மாமா என அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால் இலக்கியாவின் அத்தையைக் காணோம். அப்போதே இந்த திருமணத்தில் ஏதோ குழப்பத்தை ஏற்படுத்தத்தான் அவர் ஏற்பாடு செய்ய எங்கேயோ சென்றிருக்கிறார் என்பதை ரசிகர்கள் உணரமுடிகிறது. 

அடுத்து திருமண மேடையில் அமர்ந்திருக்கிறார்கள் கௌதமும் இலக்கியாவும். இத்தனை நாட்கள் ஆசைப்பட்டது நடக்கப்போகிறது என ரசிகர்கள் குதூகலிக்கிற அந்த சமயம், இலக்கியா பெரிய மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறார். இதனைப் பார்த்த கௌதம் நீ ஓகே சொன்ன ஒரே காரணத்துக்குகாகத்தான் சம்மதிச்சிருக்கேன் என கூற, ஹலோ நீங்க ஓகே சொன்னதாலதான் நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன் என்கிறார் இலக்கியா. 

இலக்கியாவைப் பார்த்து முறைத்துக் கொண்டே என்ன உச்சாணிக் கொம்பில் ஏறி அமரும் வாய்ப்பு வந்திருக்குணு நினைக்குறியா. என் வீட்டுக்கு நீ மருமகளா வா ஆனா எப்படி நிம்மதியா வாழுறனு நான் பாத்துடுறேன் என்கிறார் பைரவி. இப்படி ஆளாளுக்கு ஒன்றை நினைத்துக் கொண்டிருக்க, தாலி கட்டும் நேரம் வருகிறது. 

தாலியை எடுத்து கட்ட வரும் வேளையில், அங்கிருந்து போலீஸ் வருகிறது. அஞ்சலியின் வாய்ஸ் மெசேஜ் ஒன்றை எடுத்து காண்பிக்கிறார் காவல் ஆய்வாளர். இதனைக் கேட்டதும் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். 

சரி வாருங்கள் செக் பண்ணி பாக்கலாம் என இலக்கியாவை அவளது அறைக்கு காவலர்கள் அழைத்து செல்கின்றனர். அங்கு அவள் தனது பையை எடுத்து காண்பிக்கிறார். உடனே காவலர்கள் மக்கள் முன்னே எடுத்து காமிக்கலாம் என மண மேடை அருகே மக்கள் கூட்டத்துக்கு வருகின்றனர். 

அங்கே ஒவ்வொரு துணியாக வெளியில் எடுத்து போடுகையில், அங்கே ஒரு நெக்லெஸ் கிடைக்கிறது. அது கௌதம் குடும்பத்து நகைதான் என்பதை உறுதி செய்துகொள்கின்றனர். இனி வேறு வழியில்லை உங்களை அரெஸ்ட் பண்றோம் என இலக்கியாவை அதிகாரிகள் அழைத்துச் செல்கின்றனர். 

அப்போது அங்கே ஒரு சத்தம். ஒரு நிமிசம் என ஒலிக்கும் குரலுடன் அன்பே வா சீரியலின் நாயகனும் நாயகியும் பின்னணி இசையோடு நடைபோட்டு வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்