Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தியன் 2 துவக்கம்! அமெரிக்கா பறந்த கமல்ஹாசன்...!

UDHAYAKUMAR July 27, 2022 & 18:02 [IST]
இந்தியன் 2 துவக்கம்! அமெரிக்கா பறந்த கமல்ஹாசன்...!Representative Image.

இந்தியன் 2 திரைப்படம் விரைவில் துவங்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன். இதனால் வெகு விரைவில் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படம் இந்தியன் 2. விக்ரம் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு கமல்ஹாசனின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு உலக அளவில் எழுந்துள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு நிகரான தமிழில் ஒரு படத்தை எடுத்து அதை உலகம் முழுக்க வியாபாரம் செய்யவேண்டும் என்கிற கனவை இந்த படத்தின் மூலம் கமல்ஹாசன் நிறைவேற்றவுள்ளார் என கூறப்படுகிறது. 

இந்தியன் 2 படத்தின் இந்தியன் தாத்தா கதாபாத்திரத்துக்காக போடப்பட்ட மேக்கப் குறித்த சில விசயங்களுக்காகவும் ஒப்பனை சோதனைகளுக்காகவும் கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வரும் ஆகஸ்ட் மாதம் அல்லது செப்டம்பர் மாதம் நிச்சயம் இந்தியன் 2 ஷூட்டிங் துவங்கும் என்கிறார்கள் படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்