Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தியன் 2 படத்தில் கார்த்திக் இல்லையாம்.... கமலுடன் மீண்டும் இணையும் விக்ரம் வில்லன்...!

UDHAYAKUMAR August 09, 2022 & 16:07 [IST]
இந்தியன் 2 படத்தில் கார்த்திக் இல்லையாம்.... கமலுடன் மீண்டும் இணையும் விக்ரம் வில்லன்...!Representative Image.

இந்தியன் 2 படத்தில் கார்த்திக் நடிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் விக்ரம் படத்தின் வில்லனுக்கு இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரம் இருப்பதாகவும் அவரும் விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நவரச நாயகன் கார்த்திக் விரைவில் இந்தியன் 2 படத்தில் இணைவார் எனும் அளவுக்கு செய்திகள் இணையங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அதன் உண்மை தன்மை குறித்து தெரிந்துகொள்ள படக்குழுவில் இடம்பெற்றுள்ள ஒருவரிடம் விசாரித்தோம். கார்த்திக் இந்த படத்தில் இடம்பிடித்துள்ளாரா எனும் கேள்விக்கு அவரிடமிருந்து வந்த பதில் இல்லை என்பதுதான். கூடுதலாக சில தகவல்களை அவரிடமிருந்து கேட்டு பெற நினைத்தபோது, சுவாரஸ்யமான ஒரு விசயம் கிடைத்தது. அது விக்ரம் படத்தின் வில்லனைப் பற்றியதுதான். 

விக்ரம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் நடிகர் சத்யராஜ். அவரை மீண்டும் கமல்ஹாசனுடன் முக்கிய வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்ததாம். அவருக்கும் கால்ஷீட் ஒத்துவரவே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் செப்டம்பர் 13 ஷூட்டிங் துவங்கும்போது சத்யராஜும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என தெரிவித்தார் பெயர் குறிப்பிட விரும்பாத தகவல் தொடர்பாளர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்