Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Jailer Update : டாக்டர் படத்தின் அடுத்த பாகமா? ஜெயிலர் முன்னோட்டத்தை டிகோட் செய்யும் ரசிகர்கள்...! | Jailer Muthuvel Pandian Arrives looks remembering doctor movie

UDHAYA KUMAR Updated:
Jailer Update : டாக்டர் படத்தின் அடுத்த பாகமா? ஜெயிலர் முன்னோட்டத்தை டிகோட் செய்யும் ரசிகர்கள்...! | Jailer Muthuvel Pandian Arrives looks remembering doctor movieRepresentative Image.

ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த படமாக உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளான இன்று, சன் பிக்சர்ஸ் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் புதிய படமான ஜெயிலர் படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்று இன்று மாலை வெளியாகும் என கூறியிருந்தது. 

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தின் ரஜினிகாந்த் அறிமுக காட்சிகள் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. இதில் ரஜினிகாந்த் பார்ப்பதற்கு அமைதியான ஆனால் செயலில் காட்டம் காட்டும் RAWவான ஆளாக தோன்றுகிறார். 

பார்ப்பதற்கு கிட்டத்தட்ட டாக்டர் படத்தின் சாயல் இருப்பதாகவே தெரிகிறது. காரணம் அதேமாதிரியான ஸ்டிஃப்பான தோரணையில், ஷர்ட் இன் செய்துகொண்டு, புட்டி கண்ணாடியில் அறிமுகமாகிறார் ரஜினிகாந்த். நன்றாக யோசித்துப்பார்த்தால் இப்படித்தான் சிவகார்த்திகேயனும் டாக்டர் படத்தில் இருப்பார். 

ஜெயிலர் படத்தின் தலைப்பே அவரின் கதாபாத்திரத்தைக் கிட்டத்தட்ட உறுதிப்படுத்திவிட்ட நிலையில், அந்த பட்டாகத்தி தான் சம்பந்தமில்லாமல் இருக்கிறது. டார்க் ஹியூமர் ஏதும் முயற்சிக்கிறாரா நெல்சன் என பலரும் பேசி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இன்னும் இரண்டு நாளைக்கு இதுதான் டாக். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்