Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Rajinkanth Birthday Special : மீண்டும் மீண்டும் ஏமாறும் ரசிகர்கள்.. ரஜினி வீட்டில் என்ன நடந்தது? | Rajinikanth Fans gathered outside superstar's house

UDHAYA KUMAR Updated:
Rajinkanth Birthday Special : மீண்டும் மீண்டும் ஏமாறும் ரசிகர்கள்.. ரஜினி வீட்டில் என்ன நடந்தது? | Rajinikanth Fans gathered outside superstar's houseRepresentative Image.

ரஜினிகாந்தை காண சென்று மீண்டும் மீண்டும் ஏமாற்றமடைந்த ரஜினி ரசிகர்கள். இது ஒருமுறையல்ல இது மாதிரி பலமுறை நடந்திருக்கிறது என ஆதங்கத்தில் அழுதுகொண்டே சென்ற ரசிகர்கள். பாவம் பாமர ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரின் மீது வைத்துள்ள பாசம்தான் எத்தனை பெரிது. 

ரஜினிகாந்த் அவர்களைச் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து சொல்ல அதிகாலை முதலே அவரது வீட்டில் ரஜினி ரசிகர்கள் குவிந்தனர்.  சூப்பர் ஸ்டாரைப் பார்த்து விட மாட்டோமே அவர் கையசைத்து சிரிப்பதை பார்த்து ரசித்துவிட மாட்டோமா என ஏக்கத்தில் இருந்தார்கள் 50 வயதைக் கடந்த சில ரசிகர்கள். 

இன்னும் சிலரோ ரஜினிகாந்த் வீட்டுக்கு வந்து வந்து சென்று கொண்டிருந்தனர். காலை முதலே ரஜினி வீட்டில் ஒவ்வொருவராக ரசிகர்கள் பலர் குவிந்த நிலையில், வீட்டிலிருந்து வெளியே வந்த ரஜினிகாந்த் அவர்களின் மனைவி லதா ரஜினிகாந்த், கணகலங்கினார். இப்போது அவர் வீட்டில் இல்லை நீங்கள் வீட்டுக்கு செல்லுங்கள் என்றார். 

பல ரசிகர்கள் அவரைப் பார்த்த விதம் மிகவும் பரிதாபமாக இருந்தது. அவர்களைப் பார்த்து லதா, ரஜினிகாந்த் அவர்கள் வீட்டில் இல்லை, இருந்திருந்தால் நிச்சயம் உங்கள் அனைவரையும் சந்தித்திருப்பார் என்று கூறிவிட்டு சென்றார். 

வருத்தத்தில் இருந்த ரசிகர்கள் சிலர். தலைவர் வீட்டுல இல்ல. இருந்திருந்தா ராகவேந்திரா மண்டபத்துலயே ரசிகர்களோட மீட் வச்சிருப்பாரு. கறி சோறு போட்டு விருந்தே வச்சிருப்பாரு என பாவமாக சொல்லிச் சென்றார் அந்த ரசிகர். 

இது முதல் முறையல்ல பலமுறை ரஜினிகாந்த் அவர்களது வீட்டில் இல்லாத நிலையிலும் அவரது ரசிகர்கள் ரஜினிகாந்த் வீட்டில் கூடி அவரை சந்திக்க வற்புறுத்துவார்கள். ரஜினிகாந்த் அவர்களுக்கு மிகவும் வயதாகிவிட்ட சூழ்நிலையில் அவர் கூட்டமாக யாரையும் சந்திக்கக்கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்