Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரின்ஸ் படத்தின் ரெண்டாவது சிங்கிள்.... திரும்பவும் அதே ரூட்டா சிகா...?

UDHAYA KUMAR September 22, 2022 & 16:30 [IST]
பிரின்ஸ் படத்தின் ரெண்டாவது சிங்கிள்.... திரும்பவும் அதே ரூட்டா சிகா...?Representative Image.

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகவுள்ளது. இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் ஆரம்பம் தொட்டே கலகலப்பாகவும், ஜாலியாகவும் இளைஞர்களுக்கு பிடித்த வகையிலும் இருக்கும் என்பதால் புதிதாக வளரும் குழந்தைகளும் சரி, இளைஞர்களும் சரி இவரின் ரசிகர்களாக மாறிப்போயுள்ளனர். இதனால் இரண்டு 100 கோடி படங்களைக் கொடுத்து வெற்றி நாயகன் வரிசையில் அமர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். 

சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளது. முதல் முறையாக ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு நிகராக சிவகார்த்திகேயன் படமும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்த படத்தின் முதல் சிங்கிள் முன்னதாக வெளியாகியிருந்த நிலையில், தற்போது அடுத்த பாடலை வெளியிடுகிறது படக்குழு. 

ஜெஸிக்கா என்று தொடங்கும் இந்த பாடலில் நாயகன் சிவகார்த்திகேயன் நாயகியை துரத்தி துரத்தி காதலிப்பது போலத்தான் காட்சி அமைத்திருக்கிறார்கள் போல. இது போஸ்டரைப் பார்க்கும் போது தெரிய வருகிறது. இதனால், சிவகார்த்திகேயன் திரும்ப திரும்ப நாயகியை ஸ்டால்கிங் செய்யும் கதாபாத்திரமாகவே நடிக்கிறார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், ரெமோ, சீமராஜா, மிஸ்டர் லோக்கல், ஹீரோ, நம்ம வீட்டு பிள்ளை,  டான் முதற்கொண்டு அனைத்து படங்களில் இதுபோல ஒரு காட்சியோ, பாடலோ ஏன் மொத்த படமுமே அப்படித்தான் இருக்கும் என ரசிகர்கள் சிலர் புகார் எழுப்புகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்