Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மிரட்டல் லுக்கில் ராகவா லாரன்ஸ்..! ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் அறிமுக டீசர் வெளியீடு!

UDHAYA KUMAR Updated:
மிரட்டல் லுக்கில் ராகவா லாரன்ஸ்..! ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் அறிமுக டீசர் வெளியீடு!Representative Image.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸின் அறிமுக டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யாவின் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

கடந்த 2014ம் ஆண்டு வெளியாகி கோலிவுட்டை மட்டுமல்லாது இந்திய சினிமா உலகையே கலக்கிய படம் ஜிகர்தண்டா. இந்த படத்தின் மற்ற மொழி பதிப்புகளில் வெளியிட நிறைய போட்டிகள் இருக்கின்றன. சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் இது. 

வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றி பெற்ற இந்த திரைப்படம்,  பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது. இந்த படம் வெளியாகி 8 வருடத்தை கடந்த தினத்தன்று இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிப்பு இருந்தது. இதனால் ரசிகர்கள் குஷியாகினர். 

இந்நிலையில் அந்த படத்தின் அறிமுக டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. மிகவும் மிரட்டலான டீசராக இது அமைந்துள்ளது. 

சந்தோஷ் நாராயணன் இசையில், மிகவும் வித்தியாசமான கதையாக அமையும் எனத் தெரிகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்