Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 69,924.63
99.03sensex(0.14%)
நிஃப்டி21,002.90
33.50sensex(0.16%)
USD
81.57
Exclusive

பெரியார், அம்பேத்கர், காமராஜர் மட்டும் போதாது... விஜய் பேச்சுக்கு வெற்றிமாறன் ரியாக்‌ஷன் இதுதான்

Aruvi Updated:
பெரியார், அம்பேத்கர், காமராஜர் மட்டும் போதாது... விஜய் பேச்சுக்கு வெற்றிமாறன் ரியாக்‌ஷன் இதுதான்Representative Image.

லோகேஷ் கனகராஜ் இயகக்த்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்னும் சில நாட்களில் ஷூட்டிங் முடிந்துவிடும் என்றும் விரைவில் விஜய் டப்பிங் கொடுப்பார் என்றும் தெரிகிறது. படத்தின் முதல் சிங்கிள் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகவிருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ்.

இதற்கிடையே 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை சந்திக்க முடிவு செய்திருந்தார். அதன்படி நேற்று நீலாங்கரையில் வைத்து சந்திப்பை நிகழ்த்தினார். அப்போது மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து சான்றிதழையும், ஊக்கத்தொகையையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய விஜய் தனது பேச்சை ஆரம்பிக்கும்போது அசுரன் படத்தில் வரும் காடு இருந்தா புடுங்கிக்குடுவானுங்க, நிலம் இருந்தா பறிசிக்குடுவானுங்க ஆனா படிப்ப நமட்டேர்ந்து எடுக்க முடியாது” என வசனத்தை பேசி தொடங்கினார். அது பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

பெரியார், அம்பேத்கர், காமராஜர் மட்டும் போதாது... விஜய் பேச்சுக்கு வெற்றிமாறன் ரியாக்‌ஷன் இதுதான்Representative Image

சுதந்திரத்தை சரியாகப் பயன்படுத்துங்கள்

தொடர்ந்து பேசிய அவர், தேர்வில் வெற்றி பெறாதவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். அவர்களுக்கு தைரியத்தை கொடுங்கள். குணத்தை இழந்தால் அனைத்தையுமே இழந்த மாதிரி. இதற்கு பிறகு நீங்கள் வெவ்வேறு ஊர்களுக்கு, பள்ளிகளுக்கு செல்லலாம். ஹாஸ்டலில் தங்கி படிக்கும் சூழல் உருவாகலாம். அப்போது ஒரு சுதந்திரம் கிடைக்கும். அந்த சுதந்திரத்தை முறையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

உங்களால் முடியாது என்று பலர் சொல்வார்கள். அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாதீர்கள். உங்களுக்குள் ஒருவனோ, ஒருத்தியோ இருப்பார். அதை கேளுங்கள். பெரியார், அம்பேத்கர், காமராஜரை படியுங்கள். நீங்கள்தான் நாளைய வாக்காளர்கள். நல்ல தலைவர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள். பணம் வாங்காமல் வாக்கு அளிக்க வேண்டும்” என்றார்.

பெரியார், அம்பேத்கர், காமராஜர் மட்டும் போதாது... விஜய் பேச்சுக்கு வெற்றிமாறன் ரியாக்‌ஷன் இதுதான்Representative Image

அண்ணாவும் முக்கியம்

இந்நிலையில் விஜய் பேசியது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன் கூறுகையில், “சினிமாவில் நாம் சொல்கின்ற ஒரு விஷயம், சமூகத்துல மிக முக்கியமான ஒரு நபரிடம் போய் சென்றடையும் பொழுது அதனுடைய தாக்கம் என்னவாக இருக்கும் என்பதற்கான ஒரு மிக பெரிய உதாரணம்தான் இது. அண்ணாவையும் படிக்க வேண்டும்:

அம்பேத்கர், பெரியாரை படிக்க வேண்டும் என்று அவர் சொன்னது, அனைவரும் அவர்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக. அம்பேத்கர், பெரியார், காமராஜர் மற்றும் அண்ணாவையும் படிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்