Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பத்தல பத்தல... பத்து கோடி பார்வைகளைப் பெற்று சாதனை...! | pathala pathala song views crossed 10 crore views on YouTube

UDHAYA KUMAR Updated:
பத்தல பத்தல... பத்து கோடி பார்வைகளைப் பெற்று சாதனை...! | pathala pathala song views crossed 10 crore views on YouTubeRepresentative Image.

விக்ரம் படத்தில் இடம்பெற்றுள்ள பத்தல பத்தல பாடல் 10 கோடி பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தயாரித்து, நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இந்த படம் இதுவரை வெளியான தமிழ்ப் படங்களின் சாதனைகளை முறியடித்து மிகப் பெரிய வசூலை தமிழக அளவில் பெற்றுள்ளது. 

விக்ரம் படத்தின் ஆரம்ப காட்சியிலேயே கமல்ஹாசன் கொல்லப்படுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை கமல்ஹாசன் தவிர வேறு எந்த நடிகரும் இப்படி ஒரு நெகடிவ்வான அறிமுக காட்சியை சம்மதித்திருக்கமாட்டார்கள். விக்ரம் படத்தில் குத்துப் பாட்டு தேவையில்லை என்றே பலரும் கருத்து தெரிவித்திருந்த நிலையில், பத்தல பத்தல பாடலை கமல்ஹாசன் எழுதி, பாடியிருந்தார். அனிருத் இசையில் பக்கா லோக்கலான பாடலாக வெளியாகியிருந்தது. 

பத்தல பத்தல குட்டியும் பத்தல புட்டியும் பத்தல என தொடங்கும் இந்த பாடலில் மத்திய, மாநில அரசுகளை சாடியிருந்தார் கமல்ஹாசன். இந்த பாடல் யூடியூபில் 10 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்