Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Kaithi 2 Movie Update: டில்லி vs ரோலெக்ஸா… விக்ரம் vs ரோலெக்ஸா…? அதிர வைக்கும் கமல், சூர்யா, கார்த்தி என்ட்ரி….?

Gowthami Subramani July 04, 2022 & 15:45 [IST]
Kaithi 2 Movie Update: டில்லி vs ரோலெக்ஸா… விக்ரம் vs ரோலெக்ஸா…? அதிர வைக்கும் கமல், சூர்யா, கார்த்தி என்ட்ரி….?Representative Image.

Kaithi 2 Movie Update: தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களாக விளங்கக் கூடிய கார்த்தி மற்றும் சூர்யா இருவரும் கைதி 2 படத்தில் இணைந்து நடிக்கப் போவதாக பல்வேறு ஊடகங்களில் கூறப்பட்டு வருகிறது.

கைதி மற்றும் விக்ரம்

லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில், கடந்த 2019 ஆம் ஆண்டு கார்த்தியின் அட்டகாசமான நடிப்பில் வெளிவந்த திரைப்படமே கைதி. 2022 ஆம் ஆண்டில் கமல்ஹாசன் நடித்த பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் விக்ரம்.

இந்த இரண்டு படங்களிலும் வரும் கதைக்கான கான்செப்ட் ஒரே மாதிரியாக இருக்கும். லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இரண்டு திரைப்படங்களுமே மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

A picture containing text, person, wearing, turban

Description automatically generated

இரண்டு கதைகளும் ஒன்று

லோகேஸ் கனகராஜ் கைதி மற்றும் விக்ரம் ஆகிய இரு படங்களிலுமே, ட்ரக்ஸ் (Drugs) தயாரித்து விற்பனை செய்யும் கூட்டாளிகளைக் கண்டிபிடிப்பதைக் கருத்தாகக் கொண்டது. கைதி படம் முதல் பாகத்திலேயே அனைவருக்கும் தெரிந்தது கண்டிப்பாக கைதி 2 வரும் என்று. ஆனால், கைதி 2 படத்தில் இப்படி ஒரு சுவாரஸ்யத்தைக் கொண்டு வருவார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

விக்ரம் படத்தின் விறுவிறுப்பு

A person holding an object

Description automatically generated with low confidence

கைதி படம் போலவே, விக்ரம் படத்திலும் கஞ்சா கடத்துதலைக் கண்டுபிடிப்பதை மையமாகக் கொண்டது. இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார். விக்ரம் படத்தின் இடையில் வரும் ஒரு காட்சியில், ரோலெக்ஸ் என்ற பெயரைக் கூறியிருப்பதை அனைவரும் அறிந்திருப்பர். ஆனால், அந்த ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது யார் என்று இந்தப் படத்தின் இறுதியில் தான் தெரிந்தது.

ரோலெக்ஸ் ஆக சூர்யா.. தில்லியாக கார்த்தி

A collage of a person

Description automatically generated with medium confidence

இந்த விக்ரம் படத்தில் உள்ள ஒரு ட்விஸ்ட் என்னனா..? ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது சூர்யா. கைதி படத்திலும் விக்ரம் படத்திலும் உள்ள ஒரே வில்லன் ரோலெக்ஸ் என்று போல விக்ரம் படத்தில் காட்டியுள்ளனர்.

ஆனால், கைதி படத்தில் கார்த்தி, டிரக்ஸ் பிசினஸை முழுவதும் அழிப்பதற்காகப் போராடும் படியான கதைக்களம். அதே நேரத்தில் சூர்யா இந்த கஞ்சா பிசினஸ்-க்கான ஹெட்…

அண்ணன், தம்பி எதிரியாக

விக்ரம் படத்தில் டில்லி (கார்த்திக்) உத்திரபிரதேசத்தில் இருப்பது போலக் கூறினர். மேலும், கைதி 2 படமும் விரைவில் வெளியாகும் என்று லோகேஸ் கனகராஜ் கூறியுள்ளார். அதன் படி, வெளியாகும் கைதி 2 படத்தில் கார்த்தி ஹீரோவாகவும், சூர்யா வில்லனாகவும் நடிக்க இருப்பதாக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மேலும், விக்ரம் படத்தில் சூர்யாவைக் கண்டிபிடிக்க கமலும் இருந்தவாறு காட்டினர். இதனால், ரோலெக்ஸான சூர்யாவுக்கு எதிராக விக்ரமாக கமல் வருவாரா..? தில்லியாக கார்த்தி வருவாரா..? என்ற கேள்விகளுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

இவை அனைத்துமே விக்ரம் படத்தில் வெளியான காட்சிகளைப் பொறுத்து கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்