Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கமலுக்கு வில்லனாக மீண்டும் VJS?

UDHAYA KUMAR November 18, 2022 & 14:28 [IST]
கமலுக்கு வில்லனாக மீண்டும் VJS?Representative Image.

கமல்ஹாசனுக்கு மீண்டும் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் அவருக்கு நிகரான ஒரு கதாபாத்திரம் என கூறப்பட்டு வருகிறது. 

லோகேஷ் கனகராஜ், ஷங்கரைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசனுடன் அடுத்து இணையப்போவது யார் என்கிற கேள்வி இணையம் முழுக்க சுற்றி வருகிறது. KH233 படத்தை அடுத்து இயக்கப்போவது ஹெச் வினோத் என பேசப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து திடீரென அறிவிப்பு வெளியானது. எல்லாரும் கமல்ஹாசன் - ஹெச் வினோத் பட அறிவிப்பு வரும் என எதிர்பார்த்திருந்த நிலையில், மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணி அறிவிப்பு வெளியானது. 

ஹெச் வினோத் கமல்ஹாசனிடம் கூறிய கதையில் வில்லன் கதாபாத்திரம் நாயகனுக்கு நிகரான கனமான பாத்திரமாக இருக்கிறதாம். இதற்கு முன்னணி கதாநாயகன் ஒருவரை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்களாம். இதற்காக விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறுகிறார்கள்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்