Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Sathish Dress Controversy : விளையாட்டா பேசி வினையாச்சு..... சதீஷ்க்கு தொடர்ந்து  வரும் கண்டனம்..! 

Manoj Krishnamoorthi November 10, 2022 & 15:30 [IST]
Sathish Dress Controversy : விளையாட்டா பேசி வினையாச்சு..... சதீஷ்க்கு தொடர்ந்து  வரும் கண்டனம்..! Representative Image.

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத நடிகராக காமெடி, குணச்சித்திரம் என கலக்கி வருபவர் நடிகர் சதீஷ். இவர் 'நாய் சேகர் ' படத்தின் மூலம் கதாநாயகன் அவதாரமும் எடுத்தார். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இவர் சன்னி லியோன் உடை கௌரவிக்கும் வகையில் சக நடிகையின் ஆடையை கேலி செய்தார். ஆனால் இந்த விவகாரம் தற்போது வரை சர்ச்சை எழுப்பி வருகிறது.

Sathish Dress Controversy : விளையாட்டா பேசி வினையாச்சு..... சதீஷ்க்கு தொடர்ந்து  வரும் கண்டனம்..! Representative Image

சதீஷ் கூறியது (Sathish Dress Controversy)

இயக்குநர் யுவனின் படைப்பில் உருவாகி வரும் "ஓ மை கோஸ்ட்" திரைப்படத்தின் ட்ரெயலர் மற்றும்  இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த திரைப்படத்தில்  சன்னி லியோன், சதீஷ்,  தர்ஷா குப்தா, ஜி பி முத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.    

விழாவில் பேசிய நடிகர் சதீஷ், மும்பையில் இருந்து வந்துள்ள சன்னி லியோன் தமிழ் கலாச்சாரப்படி சேலையில் வந்துள்ளார் என ஆரம்பித்து, கோவை சேர்ந்த பெண்ணான தர்ஷா குப்தா எப்படி உடை அணிந்து வந்திருக்கிறார் என நகைச்சுவையாக பேசினார்.

Sathish Dress Controversy : விளையாட்டா பேசி வினையாச்சு..... சதீஷ்க்கு தொடர்ந்து  வரும் கண்டனம்..! Representative Image

ஆடை சர்ச்சை விவகாரம் (Sathish Dress Controversy In Tamil)

ஆனால் இவரின்  பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பொது இடத்தில் ஒருவரின் உடையைப் பற்றி பேசியது நாகரிகமாக இருக்காது என கண்டனம் தற்போது வரை ஓயாமல் வருகிறது. 

Sathish Dress Controversy : விளையாட்டா பேசி வினையாச்சு..... சதீஷ்க்கு தொடர்ந்து  வரும் கண்டனம்..! Representative Image

சின்மயி கண்டனம் (Singer Chinmayi Comment on Dress Controversy)

பாடகி சின்மயி அவர்கள் "பல பேர் உள்ள ஒரு கூட்டத்தில் ஒரு பெண்ணின் ஆடை அணிவது குறித்து பேசுவது தவறு, அது நகைச்சுவை அல்ல" என தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த மாதிரியான பேச்சுகளை ஆண்கள் எப்போது தான் நிறுத்துவார் என்றும் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்